மனசிகரே என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் திரைத்துறைக்குள் அறிமுகமான நடிகை தான் நம்ம லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா . இதைத்தொடர்ந்து சரத்குமார், சூப்பர் ஸ்டார் ரஜனி காந்த் போன்ற முக்கிய பிரபலங்களுடன் நடித்து சினிமாவின் மிக பிஸியான நடிகையாக வலம் வருகின்றார் .
தமிழ் சினிமா மட்டுமின்றி தெலுங்கு மலையாளம் போன்ற மொழிகளிலும் நடித்து முன்னணி நடிகையாக வலம்வருகின்றார்
மேலும் கடந்த 28ஆம் திகதி வெளியான காத்து வாக்குல 2 காதல் திரைப்படத்தில் கண்மணி என்னும் கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றதோடு வசூலிலும் அள்ளிக் குவித்து வருகின்றது.
இந்நிலையில் நயன்தாராவின் புதிய படம் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளது. அந்தவகையில் இப்படத்தில் நயன்தாராவின் O2 படத்தில் அம்மா அவதாரம் எடுத்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன .
கதாநாயகிக்கு முக்கியம் கொடுத்து உருவாகும் இப்படத்தில் நயன்தாரா 8 வயது சிறுவனுக்கு அம்மாவாக நடித்துள்ளார் இப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
Listen News!