• Sep 20 2024

"போட்" படத்தை காண ரசிகர்களுக்கு அழைப்பு விடுத்த சிம்புதேவன்.

Thisnugan / 1 month ago

Advertisement

Listen News!

இயக்குனர் சிம்பு தேவன் இயக்கத்தில் ஜோகி பாபு ,எம் எஸ் பாஸ்கர்,கெளரி கிஷன் மற்றும் பல நடிகர்களின் பங்களிப்புடன் உருவாகி இன்று உலக அளவில் வெளியாகியிருக்கிறது "போட்" திரைப்படம்.படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ள நிலையில் இன்று மேலும் பல முன்னணி நடிகர்களின் படங்களும் வெளியாகியுள்ளன.

Image

இந்நிலையில் ரசிகர்களை திரையரங்குக்கு அழைத்திருக்கிறார் இயக்குனர் சிம்புதேவன்.மேலும் அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் "எப்போதும் புது முயற்சியை தோள் தொட்டு பாராட்டும் நீங்கள் எங்களையும் ஆதரிப்பீர்கள் என நம்புகிறோம்." என தனது நம்பிக்கையை வெளிப்படுத்தியிருந்தார்.

Boat (2024) | Boat Tamil Movie | nowrunning

மேலும் அவரது அழைப்பில் "வரலாற்று பின்னணியோடு சொல்லப்பட்டுள்ள இக்கதையில் நீங்களும் ஒரு பயணியாகி இப்படகில் - சுவாரசியமாக பயணிப்பீர்கள். படத்தின் இறுதியில் இன்றுவரை நம் ஊரில் தீராத பிரச்சனை ஒன்று உங்களிடம் கேள்வி கேட்கும்.இது போன்ற ஹாலிவுட் கடல் படங்களுக்கு கிடைக்கும் பட்ஜெட் இங்கு நமக்கு கிடை கிடைப்பதில்லை. இருந்தாலும் இதை தரம் குறையாமல் உருவாக்கியுள்ளோம்! அதுவே நம் தமிழ் திரையுலகின் இயல்பு. நேற்று பத்திரிகை மற்றும் ஊடக காட்சியிலும் பலரும் பாராட்டினார்கள். நீங்களும் அவசியம் போட படத்தை பாருங்கள்." என குறிப்பிட்டுள்ளார்.


Advertisement

Advertisement