• May 11 2024

பாசப்போராட்டத்தில் சித்தார்த்... 'சித்தா' படம் எப்படி இருக்கிறது..? ட்விட்டர் விமர்சனம் இதோ..!

Prema / 7 months ago

Advertisement

Listen News!

'பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி, சிந்துபாத்' ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் எஸ். அருண்குமார் இயக்கத்தில் தற்போது தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் 'சித்தா'. இப்படத்தில் நடிகர் சித்தார்த் முதன்மையான வேடத்தில் நடித்திருக்கிறார். 


மேலும் பாலசுப்ரமணியம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு விஷால் சந்திரசேகர் சூப்பராக இசையமைத்திருக்கிறார். நாயகனுக்கும், அவரது அண்ணன் மகளுக்கும் இடையேயான உறவை மையப்படுத்தியதாக இப்படம் அமைந்துள்ளது.


அந்தவகையில் இடாகி என்டர்டெய்ன்மென்ட் என்ற பட நிறுவனம் சார்பில் நடிகர் சித்தார்த் தயாரித்திருக்கும் இப்படமானது நாளை மறுதினம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆக இருக்கின்றது. இதனை முன்னிட்டு இப்படத்தின் பிரிமியர் ஷோ பத்திரிகையாளர்களுக்கு திரையிடப்பட்டுள்ளது. இந்நிலையில் சித்தா படத்தை பார்த்தவர்கள் என்ன கூறியுள்ளனர் எனப் பார்க்கலாம்.

அந்தவகையில் ஒருவர் கூறுகையில் "மிகச்சிறந்த படமாக உள்ளது. Siddharth மற்றும் எஸ்.யு.அருண்குமார் இணைந்து இந்த ஆண்டின் சிறந்த படங்களில் ஒன்றாக இதனை வழங்குகிறார்கள், இது மிகவும் வலுவான உணர்ச்சிகாரமான த்ரில்லர் படமாக உள்ளது, குழந்தைகள் பாதுகாப்பு என்ற தலைப்பை நாம் இதுவரை பார்த்திராத வகையில் மிகத் துல்லியமாக விவாதிக்கிறது. மொத்தத்தில் டாப் கிளாஸ் படம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.


மேலும் ஒருவர் தனது பதிவில் "இந்த மாதிரி சென்சிட்டிவ் சப்ஜெக்டை எந்த தமிழ் படமும் காட்டியதில்லை., எமோஷனல் படம், த்ரில்லர் படம்! , #Siddharth சிறந்த நடிப்பை வழங்கியுள்ளார், குழந்தை நட்சத்திரங்கள் இருவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள், பவர்ஃபுல் மூவி மூலம் உங்களை அதிரவைத்துள்ளார் இயக்குநர் #SuArunkumar, இப்படத்தை கட்டாயம் பார்க்க வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.


இன்னொருவர் தனது பதிவில் "இந்த வருடத்தின் சிறந்த படங்களில் ஒன்று, SUArunKumar இந்த த்ரில்லர் நம் அனைவருக்கும் தனிப்பட்ட முறையில் உணர்ச்சிகரமான சவாரியாக அமைகிறது" எனத் தெரிவித்துள்ளார்.


மேலும் ஒருவர் தனது பதிவில் "Chithha புதிரான, குழப்பமான, சிந்தனையைத் தூண்டும் ஒரு படம். அனைவரின்  நடிப்பும் பிரமாதம், அதிலும் குறிப்பாக சிறுமிகளின் அற்புதமான நடிப்பு. இதை தேர்வு செய்ததற்காக ஹாட்சாப் #Siddarth. வாழ்த்துக்கள்" என குறிப்பிட்டுள்ளார்.


இவ்வாறாக சித்தா படத்திற்கு பல பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement