• May 04 2024

நெல்சா வேறமாறி... வேறமாறி... ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தில் இணைந்த நடிகை தமன்னா

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகின் சூப்பர்ஸ்டார் என்றால் அது ரஜினிகாந்த் தான். அவர் நடிப்பில் தற்போது ஜெயிலர் திரைப்படம் தயாராகி வருகிறது. ரஜினியின் எந்திரன், பேட்ட, அண்ணாத்த போன்ற படங்களை தயாரித்த சன் பிக்சர்ஸ் நிறுவனம் தான் ஜெயிலர் படத்தையும் தயாரித்து வருகிறது. நெல்சன் திலீப்குமார் இப்படத்தை இயக்கி வருகிறார்.


 அவர் ரஜினியுடன் இணையும் முதல் படம் இதுவாகும்.ஜெயிலர் படத்தில் முத்துவேல் பாண்டியன் என்கிற கேரக்டரில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை 65 சதவீத படப்பிடிப்பு முடிவடைந்து உள்ளதாக கூறப்படுகிறது. 


இப்படத்திற்கு ராக்ஸ்டார் அனிரூத் தான் இசையமைத்து வருகிறார்.ரஜினியின் பிறந்தநாளன்று வெளியான ஜெயிலர் படத்தின் தீம் மியூசிக் வேறலெவலில் ஹிட்டாகி இருந்தது, இதனால் இப்படத்தின் பாடல்கள் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.


ஜெயிலர் படத்தில் ரம்யா கிருஷ்ணன் வஸந்த் ரவி, ரோபோ ஷங்கர், யோகிபாபு என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கின்றது. அத்தோடு அண்மையில் இப்படத்தில் மலையாள நடிகர் மோகன்லாலும் இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறவிப்பு வெளியாகியிருந்தது.

இந்த நிலையில் இப்படத்தில் நடிகை தமன்னாவும் இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.இவ்வாறு முக்கிய பிரபல்ஙடகள் பலரும. இப்படத்தில் இணைந்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement