• May 18 2024

நயன்தாராவின் 75வது புதிய படத்தில் களமிறங்கவுள்ள பிக் பாஸ் பிரபலம்! யார் தெரியுமா?

Jo / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் நடித்துள்ள நயன்தாராவுக்கு ‘ஜவான்’ படத்தின் மூலம் இந்தியில் அறிமுகமாகும் வாய்ப்பு கிடைத்தது. அட்லி இயக்கும் இந்தப் படத்தில் பரபரப்பு இருக்கிறது. 

2013ஆம் ஆண்டு ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான அட்லி, தொடர் வெற்றிப்படங்களைப் பெற்றுள்ளார். ஆனால் ராஜா ராணி திரைப்படம் அவரது கேரியருக்கு மிக முக்கியமானதாக இருந்தது.

இந்த படத்தில் ஆர்யா, ஜெய், நயன்தாரா, நஸ்ரியா மற்றும் பலர் நடித்திருந்தனர். ராஜா ராணிக்குப் பிறகு, நயன்தாரா – ஜெய் கிட்டத்தட்ட பத்தாண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக இணைகிறார்கள். ஜெய், நயன்தாரா கூட்டணியில் வெளியான ராஜா ராணி படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. அதேபோல் இந்த படத்திலும் இவர்களின் கூட்டணி ஜாலியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையடுத்து நயன்தாராவின் சென்டிமென்ட் நடிகரும் இப்படத்தில் இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியானது.அவரைத் தொடர்ந்து பிக்பாஸ் புகழ் சுரேஷ் சக்ரவர்த்தி மற்றும் ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் நடித்துள்ளனர். நயன்தாரா 75ல் வரும் பிரபலங்கள் குறித்த அறிவிப்பு எதிர்காலத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Advertisement

Advertisement