• May 12 2024

அந்த விஷயத்திற்காக நயன்தாரா அதிக நேரம் எடுத்துக்கொள்வாராம் .. நடிகை அனிகா ஓபன் டாக்!!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

நடிகை நயன்தாரா தமிழ் திரையுலகில் ரசிகர்களால் லேடி சூப்பர் ஸ்டார் என்றும் கொண்டாப்படுகிறார். இவர் 2005-ம் ஆண்டு மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படமான சந்திரமுகி திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்திற்கு ஜோடியாக நடித்து தமிழ் திரையில் பிரபலமானார் .கிட்டத்தட்ட 17 ஆண்டுகளாக முன்னணி நடிகையாக இருக்கிறார்.

நயன்தாரா தற்போது ஷாரூக்கானுடன் இணைந்து ஜவான் படத்தில் நடித்து வருகிறார். அட்லீ இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

சமீபத்தில் நயன்தாராவின் வீட்டிற்கு கூட ஷாருக்கான் வந்தது சென்ற வீடியோ வைரலானது. மேலும் ஜெயம் ரவியுடன் இறைவன், நயன்தாரா 75 உள்ளிட்ட படங்களையும் கைவசம் வைத்துள்ளார்.

இந்நிலையில், பிரபல நடிகை அனிகா சமீபத்தில் தன்னுடைய படத்தின் ப்ரோமோஷனுக்காக பேட்டி ஒன்றில் கலந்துகொண்டார். இதில் நயன்தாரா குறித்து பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ் என கேள்வி கேட்டப்பட்டது.இதற்கு பதிலளித்த நடிகை அனிகா, 'நயன்தாரா மிகவும் கனிவானவர் என்னிடம் எப்போதும் அன்பாக நடந்துகொள்வார்' என்று பாசிடிவான பக்கத்தை முதலில் கூறினார்.

பின் 'நடிகை நயன்தாரா மேக்கப் போட்டுக்கொள்வதற்கு அதிக நேரம் எடுத்துக்கொள்வார்' என நெகட்டிவான விஷயத்தையும் அந்த பேட்டியில் விளையாட்டாக கூறியுள்ளார் அனிகா. குறிப்பாக சில நேரம் மட்டுமே நயன்தாரா அப்படி செய்வார் என்று கூறினார்.

Advertisement

Advertisement

Advertisement