• Sep 21 2023

இன்ஸ்டாவில் ஒரே நாளில் கத்ரீனா கைஃபை ஓரங்கட்டிய நயன்..! எத்தனை ஃபாலோயர்ஸ்ன்னு பாருங்க..!

Jo / 2 weeks ago

Advertisement

Listen News!

கேரளாவில் ஒரு டிவி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக்கொண்டிருந்த நயன்தாரா. தமிழில் ஐயா படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். முதல் படம் ஹிட்டாகி அவரது நடிப்புக்கும் ரசிகர்களிடையே வரவேற்பு கிடைத்தது. அதனையடுத்து ரஜினிகாந்த்துடன் சந்திரமுகி படத்தில் நடித்து முன்னணி நடிகை வரிசையில் இணைந்தார்.


நயன்தாரா இப்போது தமிழில் தனது 75ஆவது படத்திலும், ஜெயம் ரவியுடன் இறைவன் படத்திலும் நடிக்கவிருக்கிறார். அதேபோல் ஹிந்தியில் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் ஜவான் படத்திலும் நடித்திருக்கிறார். படமானது செப்டம்பர் 7ஆம் தேதி வெளியாகிறது. படத்தின் ட்ரெய்லர் அட்டகாசமாக இருப்பதால் கண்டிப்பாக ஜவான் ஹிட்டடித்துவிடும் என்ற நம்பிக்கை அவரிடமும், அவரது ரசிகரக்ளிடமும் இருக்கிறது.


சூழல் இப்படி இருக்க எப்போதும் சமூக வலைதளங்கள், பேட்டிகளிலிருந்து ஒதுங்கியிருக்கும் நயன்தாரா சில நாட்களுக்கு முன்னதாக திடீரென இன்ஸ்டாகிராமில் என்ட்ரி கொடுத்தார். தன்னுடைய முதல் போஸ்ட்டில் வந்துட்டேனு சொல்லு என்ற கேப்ஷனோடு தனது இரண்டு மகன்களை தூக்கிக்கொண்டு நடந்துவரும் வீடியோவை வெளியிட்டிருந்தார்.

இதனையடுத்து ஜவான் படத்தின் ட்ரெய்லர் மற்றும் ஜவான் தொடர்பான போஸ்ட்களை போட்டார். 


இந்நிலையில் நயன்தாரா புதிய பெருமையை பெற்றிருக்கிறார். அதன்படி இன்ஸ்டாகிராமில் கணக்கு தொடங்கிய 24 மணி நேரத்தில் கத்ரீனா கைஃப் மட்டுமே 1 மில்லியன் ஃபாலோயர்களை பெற்றிருந்தார். தற்போது அந்த பெருமை நயன்தாராவுக்கு கிடைத்திருக்கிறது. இதுவரை அவருக்கு 2.2.மில்லியன் ஃபாலோயர்கள் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement