• Jan 19 2025

நடுரோட்டில் தள்ளாடும் நயன் விக்கி ஜோடி.! இது என்ன புது ட்விஸ்டா இருக்கு? வைரலாகும் புகைப்படம்

Aathira / 10 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் நடிகை நயன்தாரா முன்னணி நடிகையாகவும்,  சினிமா துறையில் தவிர்க்க முடியாத ஒரு நடிகையாகவும் காணப்படுகிறார்.

அவர் நடிப்பில் வெளியாகும் திரை படங்கள் பெருமளவில் வெற்றி பெற்றுள்ளன. இவருக்கென ஏராளமான ரசிகர்களும் இருக்கிறார்கள். இவர் இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். 


தனது சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது தனது காதல் கணவர் மற்றும்  அவருடைய குழந்தைகளான உயிர், உலகுடன் இருக்கும் அழகிய புகைப்படங்களையும் பகிர்வார். 


இந்த நிலையில், தற்போது நயனும் விக்கியும் நடு ரோட்டில் எடுத்துக் கொண்ட புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

இதேவேளை, அண்மையில் நயன் தனது குழந்தைகள் தனக்கு ரோஸ் கொடுத்து முத்தமிடும் அழகிய புகைப்படங்களையும், விக்னேஷ் சிவனுடன் காதலர் தினம் கொண்டாடிய புகைப்படங்களையும் பகிர்ந்த நிலையில் அவை வைரலானதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement