• May 04 2024

செல்ல மகளின் பிறந்தநாளை நண்பர்களுடன் இணைந்து... சூப்பராக கொண்டாடிய நகுல்... வைரல் வீடியோ..!

Prema / 8 months ago

Advertisement

Listen News!

பிரபல இயக்குநர் ஷங்கரின் 'பாய்ஸ்' என்ற படத்தின் மூலம் 2003ஆம் ஆண்டு கோலிவுட்டில் நடிகராக அறிமுகமானவர் நகுல். தேவயானியின் தம்பி எனும் அடையாளத்தோடு சினிமாவில் உள் நுழைந்திருந்தாலும் 'காதலில் விழுந்தேன், மாசிலாமணி, வல்லினம்' உள்ளிட்ட படங்களின் மூலம் தனக்கென ஒரு தனி அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டார்.


நடிகராக மட்டுமல்லாது பின்னணிப் பாடகராகவும் ரசிகர்களைக் கவர்ந்து சினிமாவில் படு பிசியாக இருந்து வந்த நகுல், தனது நீண்ட நாள் காதலியான ஸ்ருதி பாஸ்கரை 2016ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டு குடும்ப வாழ்க்கையில் இணைந்து கொண்டார்.


இத்தம்பதியினர் திருமணத்துக்குப் பிறகு இன்ஸ்டாவில் தங்களது காதல் புகைப்படங்களை பகிர்ந்து நெட்டிசன்களின் மனங்களைக் கொள்ளையடித்து வருகின்றனர். இதனையடுத்து இவர்களுக்கு ஒரு மகள் மற்றும் மகன் பிறந்ததும் தங்களது குடும்ப புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அதிகளவில் பகிர்ந்து வருகின்றனர்.


அந்தவகையில் தற்போது தமது மகள் அகீராவின் 3-ஆவது பிறந்தநாளை நெருங்கிய நண்பர்களுடன் இணைந்து சிறப்பாக கொண்டாடி உள்ளனர். அந்த பர்த்டே பார்ட்டி வீடியோவினை ரசிகர்கள் வைரலாக்கி வருவதோடு தமது வாழ்த்துக்களினையும் அகீராவிற்குத் தெரிவித்து வருகின்றனர்.


Advertisement

Advertisement

Advertisement