• Sep 22 2023

நாக சைதன்யா-சமந்தா மீண்டும் இணையப் போகிறார்களா..? இன்ஸ்டா பதிவுகளில் சிக்கிய உண்மை..!

Prema / 1 week ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் ஒரு கால கட்டத்தில் நட்சத்திரத் தம்பதிகளாக வலம் வந்தவர்கள் தான் நானசைத்தன்யா மற்றும் சமந்தா.இவர்கள் இருவரும் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு ரீமேக்கில் ஜோடி சேர்ந்து நடித்ததன் மூலம் காதலித்து வந்தார்கள்.


பின்னர் பெற்றோர் சம்மதத்துடன் 2017ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். பின்னர் மூன்று ஆண்டுகள் கடந்த நிலையில் இருவரும் கருத்து  வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள்.


இவர்கள் இருவரும் பிரிந்தாலும் நாக சைதன்யா சமந்தா தன் காதலியாக இருக்கும் போது எடுத்த புகைப்படங்களை நீக்காமல் இருக்கிறார். அதாவது நாக சைதன்யா கார் ரேஸில் ஆர்வம் கொண்டிருந்த போது காதலியாக இருந்த சமந்தாவுடன் காரில் பக்கத்தில் இருப்பது போன்ற புகைப்படத்தை அப்படியே வைத்திருக்கிறார் நாக சைதன்யா.


அதுமட்டுமல்லாது திருமணத்திற்குப் பின்னர் சமந்தாவுடன் எடுத்த ஒரு புகைப்படமும் அவரின் இன்ஸ்டா பக்கத்தில் இப்போதும் இருந்து வருகின்றது.


அதேபோன்று சமந்தா இன்ஸ்டா பக்கத்திலும் நாக சைத்தன்யாவின் புகைப்படங்கள் இருப்பதாக கூறி நாக சைதன்யா ரசிகர்கள் ஒரு வீடியோவை வைரலாக்கி வருகின்றனர். அந்தப் பதிவுகளை ரசிகர்கள் வைரலாக்கி இருவர் மனதிலும் காதல் இருப்பதால் மீண்டும் இருவரும் இணையுங்கள் என்று கூறி வருகிறார்கள். ரசிகர்கள் ஆசைப்படி இவர்கள் இருவரும் ஒன்று சேர்வார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். 


Advertisement

Advertisement

Advertisement