'சித்திரம் பேசுதடி' படத்தின் மூலம் இயக்குநராக அவதாரம் எடுத்தவர் தான் மிஷ்கின். இந்த படத்தின் பின்பு அதில் கதாநாயகியாக நடித்த பாவனா பற்றி பேசி சர்ச்சையை கிளப்பி இருந்தார். அதன் பின்பு அஞ்சாதே படம் இயக்கி வெற்றியை கண்டதால் இவர் மீது காணப்பட்ட விமர்சனங்கள் அப்படியே அடங்கி போனது.
இயக்குநர் மிஷ்கின் இயக்கும் திரைப்படங்கள் தனித்துவமான கதைகளத்தில் காணப்படுவதோடு திரில்லர் ஆக்சன் நிறைந்த காட்சிகளுடன் அமையப் பெற்றிருக்கும். இவர் இயக்கத்தில் வெளியான ஓநாயும் ஆட்டுக்குட்டியும், துப்பறிவாளன் போன்ற படங்கள் மிகப்பெரிய ஹிட் கொடுத்தன.
சமீபத்தில் பாட்டில் ராதா பட விழாவில் கலந்து கொண்ட மிஷ்கின், தான் ஒரு குடிகாரன் என்றும் எனக்கு சாராயம் காய்ச்ச தெரியும் என்று பேசியதோடு மட்டுமில்லாமல் இளையராஜாவையும் வம்பு இழுத்து இருந்தார். இதன்போது அவர் பேசிய சர்ச்சை கருத்துக்கள் சமூகத்தில் பெரும் விமர்சனத்திற்கு உள்ளானது. இதனால் பலரும் மிஸ்கினுக்கு எதிராக கண்டனம் தெரிவித்து வந்தார்கள்.
இந்த நிலையில், இயக்குநர் மிஷ்கினை கண்டால் காரி துப்புங்கள் என கவிஞர் தாமரை தெரிவித்துள்ளார். தற்போது அவர் இவ்வாறு கூறியது வைரலாகிய நிலையில், சமீபத்தில் மிஷ்கின் கொடுத்த பேட்டியில் கவிஞர் தாமரையிடம் பகிரங்கமாகவே மன்னிப்பு கேட்டுள்ளார்.
ஏற்கனவே தமிழ்நாட்டில் உள்ள பெண்கள் இன்ஸ்டாகிராமில் ரிலீஸ் என்ற பெயரில் ஆடும் ஆட்டத்தை பற்றி மிஷ்கின் மிகவும் தரக்குறைவாக பேசி இருந்தார்.
இது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இவ்வாறான நிலையிலேயே கவிஞர் தாமரை மிஷ்கினை கண்டால் காரி துப்புங்கள் என தெரிவித்திருந்தார். தற்போது தனது தவறை உணர்ந்த மிஷ்கின் பொது மேடையில் வைத்தே அவரிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டு உள்ளமை குறிப்பிடத்தக்கது.
Listen News!