• Sep 22 2023

என்னுடைய முதல் ஓணம் பண்டிகை- கணவருடன் சேர்ந்து வித்தியாசமான முறையில் கொண்டாடிய பாக்கியலட்சுமி சீரியல் ரித்திகா- வாவ்... சூப்பர் கிளிக்ஸ்

stella / 3 weeks ago

Advertisement

Listen News!

பொதுவாக சீரியலில் இவருக்கு பதில் இவர் என்று நடிகர்கள் மாறுவது புதியதல்ல. காரணம் சீரியல்கள் நீண்ட வருடங்களாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் தவிர்க்க முடியாத காரணங்களால் சில நடிகர்களால் தொடர்ச்சியாக அந்த கேரக்டரில் பயணிக்க முடியாமல் ஆகிவிடுகிறது.


அந்த வகையில் விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி சீரயிலில் அமிர்தா என்னும் கதாப்பாத்திரத்தில் நடித்து வந்த ரித்திகா சீரியலை விட்ட வெளியேறினார்.இவரது கதாப்பாத்திரம் நெக்கட்டிவ் ரோலில் மாறுவதால் தான் இவர் இந்த சீரியலில இருந்து விலகியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.


இவர் இதற்கு முன்பு ராஜா ராணி சீரியலில் கதாநாயகனின் தங்கை கேரக்டரில் நடித்திருந்தார். அதற்கு பிறகு விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளில் கலந்துக்கொண்டிருந்தார். அருமையான குரல் வளம் கொண்டு பாடும் திறமையுள்ள இவருக்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் அதிகமான வரவேற்பு கிடைத்தது. அதுவும் ரித்திகா மற்றும் பாலாவின் காம்பினேஷன் பலரையும் கவர்ந்தது எனலாம்.


மேலும் பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து விலகியதைத் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றார். அந்த வகையில் தனது கணவருடன் இணைந்து திருமணத்திற்குப் பிறகு முதலாவது ஓணம் பண்டிகையைக் கொண்டாடியுள்ளார். இது குறித்த புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.





Advertisement

Advertisement

Advertisement