• Sep 21 2023

ஐஸ்வர்யாவிடம் சிக்கிக் கொண்ட முல்லை மற்றும் தனம்- மூர்த்திக்கு தெரியாமல் கதிர் செய்த காரியம்- குழப்பத்தில் கண்ணன்-Pandian Stores Serial

stella / 3 weeks ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். அந்த வகையில் இந்த சீரியலில் என்ன நடக்கவுள்ளது என்று பார்ப்போம். 

கதிர் தங்களுடைய பழைய கடையை விற்பதற்காக ஒருவரை வரவழைத்து பேசுகின்றார். அப்போது கதிரின் மாமா மூர்த்திக்கு தெரியாமல் இதைஎப்பிடி விற்பீங்க மாப்பிள்ளை என்று கேட்க , கதிர் அதெல்லாம் பார்த்துக்கலாம் மாமா என்று சமாளித்து விட்டு போகின்றார். மறுபுறம் கோட்டிற்கு போன ஜுவாவையும் கண்ணனையும் காணவில்லை என்று எல்லோரும் வெயிட் பண்ணிட்டு இருக்கிறாங்க.


ஐஸ்வர்யா மட்டும் வாசலிலேயே காவல் நிற்க, தனம் கூப்பிட்டு அவங்க வந்திடுவாங்க நீ உள்ளே இரு என்று சொல்ல, ஜீவாவும் கண்ணனும் வருகின்றனர். அப்போது தீர்ப்பு என்ன ஆச்சு என்று கேட்ட போது விசாரணை எல்லாம் நடத்திட்டாங்க, ஆனால் தீர்ப்பு வழங்கிறதை மட்டும் தள்ளி வைச்சிட்டாங்க என்று சொல்ல தனம் அதிர்ச்சிக்குள்ளாகின்றார்.

இருந்தாலும் கண்ணனை சமாதானம் செய்து உள்ளே அனுப்பி விடுகின்றார். மறுபுறம் மூர்த்தி சாப்பிடப் போகாமல் கோயிலில் நின்று யோசிச்சுக் கொண்டிருக்க கதிர் வருகின்றார். அப்போது ஜீவா ஏதாவது போன் எடுத்தானா என்று கேட்க இல்லையே என்று கதிர் சொல்ல அந்த நேரம் தனம் போன் பண்ணி தீர்ப்பு வழங்காத விஷயத்தைச் சொல்ல மூர்த்தி குழப்பத்தில் இருக்கின்றார்.


இதனால் கதிர் அவரை சமாதானம் செய்து கூட்டிக் கொண்டு போகின்றார்.தொடர்ந்து முல்லை தனம் ஐஸ்வர்யா மீனா எல்லோரும் பேசிட்டு இருக்கும் போது தனத்தின் குழந்தை அழுகின்றது. இதனால் ஐஸ்வர்யா உள்ளே கொண்டு போய் பாலைக் கொடுத்து துாங்க வையுங்க அக்கா என்று சொல்ல, தனம் பேச்சுத் துணைக்கு என்று முல்லையைக் கூட்டிக் கொண்டு போகின்றார்.


இதனால் மீனா ஐஸ்வர்யாவிடம் பேசிவிட்டு முல்லையையும் தனத்தையும் பார்க்க உள்ளே சென்று விட அங்கு ஐஸ்வர்யாவும் உள்ளே சென்று விடுகின்றார்.அப்போது தனத்தின் குழந்தைக்கு முல்லை பால் கொடுப்பதைப் பார்த்து கேள்வி மேல் கேள்வி கேட்க தனம் நான் பலவீனமாக இருக்கிறேன், அதனால தான் முல்லை பால் கொடுக்கிறா என்று சொல்ல ஐஸ்வர்யா நான் இதை நம்ப மாட்டேன். கண்டு பிடிக்காமல்் விடமாட்டேன் என்று சொல்கின்றார். இத்துடன் இந்தப் ப்ரோமோ முடிவடைவதைக் காணலாம். 




Advertisement

Advertisement

Advertisement