• Feb 20 2026

பாண்டியன் வீட்டுக்குச் சென்ற முத்துவேல் குடும்பம்.. சந்தோசத்தில் கோமதி.! டுடே எபிசொட்

subiththira / 4 weeks ago

Advertisement

Listen News!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இன்று, கோமதி வீட்ட இருக்கிற எல்லாரும் சமையலுக்குத் தேவையான எல்லாத்தையும் செய்து கொண்டிருக்கிறார்கள். அந்த நேரம் பார்த்து ராஜி சந்தோசமா இருக்கிறதைப் பார்த்த சரவணன் என்ன நடந்த இப்புடி சந்தோசமா இருக்கிற என்று கேட்க்கிறார். அதுக்கு கோமதி அவங்க குடும்பம் முதல் முறையா வீட்டுக்கு வாறாங்க அப்ப சந்தோசம் இருக்காதா என்கிறார்.


அதைக் கேட்ட மீனா எங்க அப்பா, அம்மாவும் தான் வந்தாங்க அப்ப இப்புடி எல்லாம் விருந்து வைக்கலயே என்கிறார். அதுக்கு கோமதி அதுக்கென்னடி அவங்கள வரச் சொல்லு விருந்து நல்ல மாதிரி வைச்சிருவோம் என்கிறார்.அதைத் தொடர்ந்து செந்தில் ராஜியைப் பார்த்து உங்க சித்தப்பாவை நம்பலாமா.? கடைசி நேரத்தில வாறன் என்று சொல்லிட்டு ஏமாத்தமாட்டாங்களே என்று கேட்க்கிறார்.

அதுக்கு ராஜி அப்புடி எல்லாம் ஏமாத்தமாட்டாங்க என்கிறார். மறுபக்கம் காந்திமதி அவங்க வீட்டுக்கு போறதுக்கு பழங்கள் ஏதாவது வாங்கிட்டு வரச் சொல்லுறார். அதைக் கேட்ட சக்திவேல் எல்லாரும் தயாராகிட்டாங்க போலயே என்று ஜோசிக்கிறார். பின் சக்திவேல் முத்துவேல் கிட்ட எனக்கு விருந்துக்கு போறதில விருப்பம் இல்ல என்கிறார்.


அதைத் தொடர்ந்து முத்துவேல் தனக்கும் விருப்பம் இல்ல என்கிறார். அதைக் கேட்ட சக்திவேல் பிறகு ஏன் நாங்க போகணும் எல்லாரையும் கூப்பிட்டு சொல்லுங்க என்கிறார். பின் முத்துவேல் அம்மா சொன்னதுக்காக அங்க போய் சாப்பிட்டு திரும்ப வாறோம் என்கிறார். அதைத் தொடர்ந்து சக்திவேல் வீட்ட இருக்கிற எல்லாரும் கோமதி வீட்டுக்குப் போய் நிற்கிறார்கள். அதைப் பார்த்த உடனே கோமதி சந்தோசப்படுறார். இதுதான் இன்றைய எபிசொட்.  

Advertisement

Advertisement