• Apr 25 2026

அம்மாவை நினைத்து உருகிய நடிகர் அர்ஜுன்…! நெகிழ வைத்த பேச்சு

Aathira / 3 months ago

Advertisement

Listen News!

நடிகர் அர்ஜுன் சமீபத்தில் தனது அம்மாவை குறித்து பேசிய பேச்சு ரசிகர்களை நெகிழ வைத்துள்ளது. ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது, தனது வாழ்க்கையில் அம்மா வகித்த பங்கு குறித்து அவர் உருக்கமாக பகிர்ந்துகொண்டார்.

அதன்படி அர்ஜுன் பேசுகையில், ,என் வாழ்க்கையில் நான் இன்று இந்த இடத்தில் இருக்கிறேன் என்றால், அதற்கு முழுக் காரணம் என் அம்மா தான். என் ஒவ்வொரு முயற்சிக்கும் பின்னால் அவர் இருந்தார்.

எனது  22 வயதில் தந்தையை இழந்தபோது தமிழ்நாட்டில் இருந்த எனக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. அப்போது எனக்கு நடிக்க சரியாக வராத நிலையில் எனது உடற்கட்டை பார்த்து மட்டுமே சினிமாவில் வாய்ப்புகள் கிடைத்தன.


தந்தை மறைவுக்குப் பிறகு குடும்ப சுமை மொத்தமும் என் தோளில் விழுந்த போது, அதில் பாதி சுமையை எனது அம்மா  ஏற்றுக்கொண்டார்.  தங்களை இந்த நிலைக்கு ஆளாக்கியது அவர்தான் என்றார்.

மேலும், சிறுவயதில் இருந்து ஒழுக்கம், பொறுமை, கடின உழைப்பு ஆகியவற்றை அம்மாவே கற்றுக் கொடுத்ததாகவும், அவர் இல்லாத குறை இன்று வரை மனதில் இருப்பதாகவும் அர்ஜுன் உணர்ச்சிபூர்வமாக தெரிவித்தார்.

Advertisement

Advertisement