தமிழ் ரியாலிட்டி ஷோக்களில் ரசிகர்களின் மனதை கவர்ந்து வரும் பிக்பாஸ் தமிழ் சீசன் 9 தற்போது 90 நாட்களை நெருங்கி, மிகப் பெரிய திருப்பங்களுடன் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது வீட்டில் நிலைத்திருக்கிற விஜே பார்வதி, கம்ருதீன், விக்கல்ஸ் விக்ரம், கானா வினோத், திவ்யா கணேஷ், சாண்ட்ரா, சுபிக்ஷா, சபரி மற்றும் அரோரா ஆகியோரிடையே வெற்றி பெறும் போட்டி உச்ச கட்டத்தை அடைந்துள்ளது.
குறிப்பாக,Ticket To Finale டாஸ்கின் ஒரு பகுதியாக நடந்த கார் டாஸ்க் இந்த வாரத்தில் மிகப்பெரும் சர்ச்சைக்கு காரணமானது.
அந்த டாஸ்க்கின் போது, விஜே பார்வதி கார் மீது அமர்ந்திருந்த சாண்ட்ராவை எட்டி உதைத்த காட்சி, வீட்டில் மற்றும் சமூக வலைத்தளங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதை பார்த்த ரசிகர்கள் பெரும் கவலை மற்றும் விமர்சனங்களை வெளியிட்டுள்ளனர்.

இந்த சர்ச்சைக்கிடையில், முன்னாள் பிக்பாஸ் போட்டியாளரான முத்துக்குமரன் இந்த நிகழ்ச்சியைப் பற்றி தனது கருத்துகளை வெளிப்படுத்தியுள்ளார்.
அவர் அதன்போது, "ஒரு பெரிய நிகழ்ச்சியில இருக்கும் போது எவ்வளவு பொறுப்புணர்ச்சி தேவை. எவ்வளவு நாகரீகமாக இருக்கணும். இன்னைக்கு இந்த நிகழ்ச்சியை பார்க்கும் போது ரொம்ப கஷ்டமா இருக்கு. சமீபத்தில் நடந்ததை பார்க்கும் போது கூட எப்படி இதை அவங்க பொது மேடையில செய்ய முடியும். மேலும், பொது வெளியில அவங்களுக்கு எப்படி நடந்துக்கணும் என்று தெரியல. எப்படி தவறான வார்த்தைகளை கதைக்கலாம்." என்று கூறியுள்ளார்.
இந்த கார் டாஸ்க் சம்பவம் சமூக வலைத்தளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பல நெட்டிசன்கள் தங்களது கருத்துகளை வெளியிட்டு, பிக்பாஸ் போட்டியாளர்களின் நடத்தை குறித்து விவாதித்து வருகின்றனர்.
Listen News!