• Oct 08 2024

மீனாவை பேக்கு என திட்டிய முத்து.. விஜயா கொடுத்த கம்ப்ளைன்ட்? குஷியில் ரோகிணி

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட்டில், விஜயா கால் நோகுது என்று இருக்க, மீனா அவருக்கு 10 போடுவதற்காக சாமான்களை தயார் செய்கிறார். இதைப் பார்த்த முத்து நீ கொண்டு போனா அவங்க எப்படியும் பேசத்தான் போறாங்க.  நீ ஒரு பேக்கு என மீனாவுக்கு பேசுகிறார்.

மேலும் நீ இப்ப கொண்டு போனா.. எங்க அம்மா இப்படித்தான் பேசுவா என விஜயா போல நடித்துக் காட்டுகின்றார் முத்து . ஆனாலும் என்ன திட்டினாலும் பரவாயில்லை என்று சொல்லி மீனா விஜயாவுக்கு ஒத்தடம் கொடுப்பதற்காக செல்கின்றார். அங்கு போனதும் விஜயா மீனாவைப் திட்டி அனுப்புகின்றார். அதன் பின்பு அவர் கொண்டு வந்த ஒத்தனத்தை எடுத்து தனது காலுக்கு போடுகின்றார்.

அதன் பின்பு சூடு ஆறிவிட்டது மீனாவை கூப்பிட முடியாது என்று சொல்லி அவரே எழுந்து அதனை சூடாக்க செல்லுகின்றார்.  இதன் போது கிச்சனில் மேலே ஏறி மீனா விஜயாவுக்கு 10 போடுவதற்காக சாமான்களை தேடி கொண்டு இருக்கின்றார். அப்போது மீனா தவறி விழ போக முத்து வந்து பிடித்து விடுகின்றார். அந்த நேரத்தில் மேலே இருந்த மா டப்பா எல்லாம் விஜயா மீது கொட்டி விடுகின்றது.


இதை பார்த்து மனோஜ் என்று அலறி அடித்து ஓட, ரோகினையும் பார்த்து பயப்படுகிறார். அத்துடன் அங்கு வந்த ஸ்ருதியும் விஜயாவை பார்த்து பார்த்து சிரித்ததோடு மட்டுமில்லாமல் அவரை போட்டோ எடுத்துக் கொள்கின்றார். அதன் பின்பு விஜயாவின் போட்டோவை தனது ஸ்டேட்டஸில் போட்டு கோலமாவு விஜயா என கேப்சன் போட்டு வைக்கின்றார். இதை பார்த்த ரோகினி நேரே விஜயாவிடம் சென்று சொன்னதோடு இதற்கு ஸ்ருதி மட்டும் காரணம் இல்லை மீனாவும் காரணம் என்று ஏத்தி விடுகிறார்.

இதனால் கோபப்பட்ட விஜயா, பார்வதி வீட்டுக்கு சென்று அங்கு சுதாவுடன் பேசுகின்றார். விஜயாவுடன் ரோகிணியும் செல்கின்றார். அப்போது உங்க பொண்ணு ஸ்ருதிக்கு மரியாதையே தெரியாது. அவர் செய்த காரியத்தை பாருங்கள் என்று கம்ப்ளைன்ட் பண்ணுகின்றார் இதுதான் இன்றைய எபிசோட்.

Advertisement