• May 21 2024

மீனாவிடம் கெஞ்சும் முத்து.. பாட்டி கொடுத்த அதிர்ச்சி , பக்காவா டிராமா போடும் ரவி – சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோட் அப்டேட்..!

Jo / 10 months ago

Advertisement

Listen News!

 விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோடு முத்து சம்மதம் சொல்லிவிட்டானா என அன்னம் அக்கா பாட்டி இடம் கேட்க எல்லாம் உங்க இஷ்டம் என்று சொல்லிட்டான் என்று பாட்டி சொல்ல விருப்பம் இல்லாம எப்படி நான் என்று கேட்க அதெல்லாம் போகப் போக சரியாகிவிடும் எல்லாம் நடக்க வேண்டிய நேரத்துல சரியா நடக்கணும் என பாட்டி சொல்ல அன்னம் அக்கா அதுவும் சரிதான் என சொல்கிறார்.

பிறகு மீனா வந்து பாட்டி சாப்பாடு வந்துடுச்சு நான் வடித்து வைத்துவிட்டு வெளியே போயிட்டு வரேன்னு கிளம்பி செல்ல பாட்டி நில்லுடா நீ வெளியே போகக்கூடாது என தடுத்து நிறுத்த ஓ மீனா கிட்ட சொல்லிட்டு போகணுமா அப்பாவும் மத்தவங்களுக்கு போயிட்டு வரேன் சொல்லிட்டேன் பாட்டி என்று சொல்லி கிளம்ப பாட்டி இன்னைக்கு உனக்கு நாள் குறிச்சிருக்கு வெளியே போகக்கூடாது என தடுக்கிறார். அது சாயங்காலம் தானே பாட்டி இப்ப என்ன இருக்கு நான் போய் பங்க்ஷன்ல பாத்துட்டு வரேன் என சொல்ல உன் பொண்டாட்டி சம்மதம் சொன்னா நீ நோ என்று சொல்கிறார்.

பிறகு முத்து மீனாவிடம் கெஞ்ச மீனா சரி போயிட்டு வரட்டும் என சொல்ல பிறகு பாட்டி சீக்கிரம் வந்துடணும் என சொல்லி அனுப்புகிறார். இந்த பக்கம் நண்பர்களுடன் கல்யாணம் பண்ணாதீங்க என பேசும் முத்து பிறகு தன்னுடைய நண்பனுக்கு போன் செய்து இன்சூரன்ஸ் கட்டிடியா என்றெல்லாம் விசாரிக்கிறார்.

மறுபக்கம் ரவி ஸ்ருதி வரைந்து அனுப்பிய தன்னுடைய போட்டோவை பார்த்து எவ்வளவு மிஸ் பண்ற மாதிரியே இருக்கு நேர்ல பார்க்க அழகா தான் இருக்கா என்று யோசிக்கிறார். பிறகு தன்னைத்தானே அடித்துக் கொள்ளும் ரவி வலிக்குது வேற வழி ஏதாவது யோசிக்கலாம் என்று பிளான் போட்டு தலையில் கட்டுடன் ஒரு போட்டோவை எடுத்து சுருதிக்கு அனுப்பி போன் செய்து உனக்கு ஒரு போட்டோ அனுப்பி இருக்கேன் பாரு என சொன்னது ஸ்ருதி இதை பார்த்து சந்தோஷப்படுகிறார்.

மேலும் ரவி நீ சொன்னா மாதிரி அவன் ரவுடியா தான் இருக்கான் அவனை அடிச்சதும் நாலஞ்சு பேர கூட்டிட்டு வந்துட்டான் எல்லாரையும் அடிச்சு ஓட விட்டுட்டேன் ஆறு மாசத்துக்கு அவன் எழுச்சிக்கவே மாட்டான் என்றெல்லாம் பில்டப் கொடுக்க சுருதி இப்ப நீ எனக்கு ரொம்ப க்ளோஸ் ஆகிட்டேன் நீ மட்டும் நேரில் இருந்த உன்னை ஹக் பண்ணி தேங்க்ஸ் சொல்லி இருப்பேன் என சொல்கிறார்.

மேலும் நீ எந்த ரெஸ்டாரண்ட்ல வேலை செய்ற நான் உன்னை வந்து பார்க்கிறேன் என சொன்னது நான் இப்போ வீட்ல இருக்கேன் அவங்க நான் அடிச்சு எனக்கு டயர்டு ஆயிடுச்சு அதான் ரெஸ்ட் எடுக்க வீட்டுக்கு வந்துட்டேன்னு சொல்லி சமாளிக்கிறார். இங்கே முத்து வீட்டுக்கு வர அப்போது பாட்டி பெட் எல்லாம் தட்டி எல்லாம் ஏற்பாடுகளையும் செய்து கொண்டிருக்கிறார்.

வீட்டுக்கு வந்த முத்துவுக்கு முருங்கை கீரை, முருங்கைக்காய், என அத்தனையும் முருங்கையை வைத்து செய்து சாப்பாடு பரிமாற அவன் மீனாவை பற்றி நக்கல் அடிக்க பார்ட்டி முத்துவை அடித்து அவ உனக்கு கிடைச்ச பொக்கிஷம், பிரேக் மாதிரி அவ இல்லனா நீ நேரா போய் மரத்துல முட்டிக்குவ என அறிவுரை சொல்ல மீனா சந்தோஷப்படுகிறார்.

பிறகு பாட்டி தூங்கிக் கொண்டிருக்க முத்து நைசாக எழுந்து வெளியே செல்ல முயற்சி செய்ய பாட்டி அவனை தடுத்து நிறுத்த வெளியே போயிட்டு வந்துடறேன் பாட்டி என கெஞ்சுகிறார். பிறகு மீனாவிடம் அனுமதி கேட்க சொல்ல முத்து மீனாவிடம் கேட்க மீனா எதுவும் சொல்லாமல் உள்ளே செல்ல புடவை பிடித்து இழுத்து கெஞ்சுகிறார்.

இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைய நாளைய எபிசோட் குறித்த ப்ரோமோ வீடியோவில் ரவியும் ஸ்ருதியும் நேருக்கு நேர் சந்தித்துக் கொள்கின்றனர்.

Advertisement

Advertisement