• Jul 14 2026

சிந்தாமணி வீட்டில் புகுந்து ரணகளம் பண்ணிய முத்து.! இறுதியில் நடந்த சுவராஸ்ய சம்பவம்.!

Aathira / 3 weeks ago

Advertisement

Listen News!

சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட்டில், மீனாவை காணவில்லை என்றதும் முத்து பதறிக்கொண்டு சிந்தாமணியின் வீட்டுக்குச் செல்கின்றார். அங்கு, மீனாவை எதற்காக கடத்தினீர்கள்? ரேகா விஷயத்தில் அவளாகத்தான் வீட்டை விட்டு வெளியே சென்றாள். அதற்காக மீனாவை கடத்துவது நியாயம் இல்லை என சண்டை போடுகின்றார்.

ஆனாலும் சிந்தாமணி, நாங்கள் மீனாவை கடத்தவில்லை என்று தெரிவிக்கின்றார். இதன்போது வாக்குவாதம் நடைபெறுகின்றது. அதற்கு பின்பு சிந்தாமணி தன்னுடைய கணவரிடம், நாம் நம்ம பிரச்சினையை பார்ப்போம். மீனாவை யார் கடத்தினால் என்ன? என்று கூறுகின்றார்.

இதைத்தொடர்ந்து வீட்டிற்கு வந்த முத்து, மீனாவின் வண்டி வாசலில் நிற்பதை பார்த்து சந்தோஷப்படுகின்றார். அதற்கு பின்பு அவரிடம் சென்று, எதற்காக சொல்லிவிட்டு செல்லவில்லை? என்று சண்டை போடுகின்றார். அதன் பின்பு சாப்பிடும்போது மீனா நடந்தவற்றை கூறுகின்றார்.


அதன்படி லட்சுமி அக்காவுக்கு பிரசவ வலி வந்து, அவருடன் துணையாக மருத்துவமனையில் இருந்ததாகவும், அவருக்கு பெண் குழந்தை பிறந்ததாகவும், இறுதியில் அந்த குழந்தைக்கு தன்னுடைய பெயரை வைப்பதாகவும் மீனா கூறுகின்றார்.

அடுத்த நாள் டூரிஸ்ட் அசோசியேஷனில் இருந்து வந்த உறுப்பினர்கள், முத்து நிறைய கார்கள் வைத்து வாடகைக்கு விடுவதாலும், பல நல்ல விஷயங்களை செய்த காரணத்தாலும், அவர்களது சங்கத்தில் முத்துவை உறுப்பினராக தேர்ந்தெடுத்துள்ளதாக தெரிவித்தனர்.

இதனை கேட்டு மகிழ்ச்சியடைந்த மொத்த குடும்பமும் முத்துவைப் பற்றி பாராட்டித் தள்ளுகின்றனர். இதன்போது முத்து, இதற்கெல்லாம் காரணம் என்னுடைய மனைவிதான் என்று கூறுகின்றார். பின்னர் தன்னுடைய அப்பாவைப் பற்றியும் பெருமையாக கூறுகின்றார். இதோடு இன்றைய எபிசோட் முடிவடைந்தது.

Advertisement

Advertisement