• Apr 26 2024

ஹாலிவுட் பட ரேஞ்சில் வெளியாகிய சூர்யா 42 படத்தின் மோஷன் போஸ்டர்- அடடே சூப்பர் அப்டேட்டாக இருக்கே

stella / 1 year ago

Advertisement

Listen News!

இயக்குநர் பாலா இயக்கத்தில் வணங்கான் என்னும் திரைப்படத்தில் சூர்யா மிகவும் பிஸியாக நடித்து வந்தார். பின்பு அப்படமானது பாதியிலேயே நிறுத்தப்பட்டதை அடுத்து சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா 42 என்னும் படத்தில் நடித்து வருகின்றார்.

இப்படத்தை யுவி கிரியேசன்ஸ் நிறுவனமும், ஸ்டூடியோ கிரீன் நிறுவனமும் இணைந்து பிரம்மாண்டமாக தயாரித்து வருகின்றது. சிறுத்தை சிவாவுடன் சூர்யா முதல் முறையாக இணைவதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பானது ரசிகர்களிடையே அதிகமாகவே காணப்படுகின்றது.

இப்படத்தில்  சூர்யாவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா பதானி நடிக்கிறார். இப்படத்தின் மூலம் அவர் தமிழில் ஹீரோயினாக அறிமுகமாக உள்ளார். இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இப் படத்தின் ஷூட்டிங் கடந்த மாதம் பூஜையுடன் தொடங்கியது. 


இப்படத்தில் முதற்கட்ட படப்பிடிப்பை கோவாவில் நடத்தி வருகின்றனர். இப்படத்தை இரண்டு பாகங்களாக வெளியிட திட்டமிட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது. அதிரடி ஆக்‌ஷன் கதையம்சம் கொண்ட படமாக இது தயாராகி வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், சூர்யா 42 படத்தின் மோஷன் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் இப்படம் 3டி-யில் உருவாக உள்ளதாக குறிப்பிட்டுள்ள படக்குழு, இப்படத்தை மொத்தம் 10 மொழிகளில் வெளியிட உள்ளதாகவும் அறிவித்துள்ளனர். மேலும் இந்த மோஷன் போஸ்டரை பார்க்கும் போது ஹாலிவுட் பட ரேஞ்சுக்கு இருப்பதாக ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 


Advertisement

Advertisement

Advertisement