• Dec 07 2022

ஜி.பி முத்துவை பார்க்க ஏங்கிய மாடல்கள்.. சைடு கேப்ல தலைவர் என்ன சொன்னாரு தெரியுமா..?

Listen News!
Aishu / 1 month ago
image
Listen News!

சன்னி லியோன் நடிப்பில் வெளிவர இருக்கும் ஓ மை கோஸ்ட் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட GP முத்துவை சந்திக்க இரண்டு மாடல்கள் வந்திருந்தனர். அவர்களுடன் முத்து தனக்கே உரித்தான பாணியில் பேசும் வீடியோ இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.

டிக்டாக் மூலமாக மக்களிடையே பிரபலம் அடைந்தவர் GP முத்து. தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியை சேர்ந்த இவர் தனது வெகுளித்தனமான பேச்சின் மூலம் ஏராளமான ரசிகர்களை பெற்றார் என்று தான் கூற வேண்டும். யூடியூப் பக்கத்திலும் வீடியோ போட்டுவரும் முத்து, ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன்  6-ல் பங்கேற்றார். 

இதன் பின்னர், தனது குடும்பத்தினரை விட்டு பிரிந்து இருக்க முடியவில்லை என கவலை தெரிவித்துவந்த முத்து, பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நடிகர் கமல்ஹாசனிடம் கூறிவிட்டு வீட்டை விட்டு வெளியேறினார்.இவ்வாறுஇருக்கையில், அவர் "ஓ மை கோஸ்ட்" திரைப்படத்தில் நடித்திருக்கிறார். நேற்று நடைபெற்ற இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் அவர் கலந்துகொண்டார்.

“ஓ மை கோஸ்ட்”   (OMG) திரைப்படத்தினை  VAU MEDIA ENTERTAINMENT சார்பில் தயாரிப்பாளர் D.வீரா சக்தி மற்றும் WHITE HORSE STUDIOS சார்பில் K. சசிகுமார் இணைந்து தயாரிக்கின்றனர். நடிகை சன்னி லியோன் முதன்மை பாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தில் சதீஷ் மற்றும் தர்ஷா குப்தா முக்கிய பாத்திரங்களில் நடிக்க, யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், ரவி மரியா, ரமேஷ் திலக், GP முத்து, அர்ஜுனன், தங்கதுரை ஆகியோருடன் மற்றும் பல முன்னணி நடிகர்கள் இணைந்து நடிக்கின்றனர்.

அத்தோடு நேற்று நடைபெற்ற இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் GP முத்து கலந்துகொண்டார். அப்போது, தனக்கு பல இடங்களில் ரசிகர்கள் இருப்பதாக அவர் கூற , அரங்கிற்குள் இரண்டு மாடல்கள் உள்ளே நுழைந்தனர். ஆங்கிலத்தில் அவர்கள் பேச, "என்ன சொல்லுறாங்க இவங்க?" என குழப்பத்துடன் முத்து கேட்டார். இடையே, நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய VJ அர்ச்சனா, மாடல்கள் கூறியவற்றை தமிழில் மொழிபெயர்த்து முத்துவிடம் சொன்னார்.

அப்போது, முத்துவின் வீடியோக்கள் தங்களுக்கு மிகவும் பிடித்திருப்பதாக மாடல்கள் கூறினர். உடனே,"என் வீடியோக்கள் எல்லாம் தமிழ்ல இருக்குமே.. உங்களுக்கு எப்படி புரிஞ்சது?" என கேட்டார். இதற்கு டிரான்சிலேஷன் மூலமாக வீடியோக்களை பார்த்து வருவதாக அந்த பெண்கள் சொன்னார். இதனிடையே, முத்துவை பற்றி ஏதேனும் சொல்கிறீர்களா? என மாடல்களை பார்த்து அர்ச்சனா கேட்டார். அப்போது தன்னுடன் வந்த பெண் வெட்கப்படுவதற்காக இன்னொரு ரசிகை தெரிவிக்க, உடனே,"வெட்கப்படாதீங்க, உங்களை பார்த்து நான் தான் வெட்கப்படணும்" என GP முத்து சொல்ல, அரங்கமே சிரிப்பொலியால் அதிர்ந்துபோனது.