• Dec 01 2022

உலக சாதனை படைத்தது அவதார் 2 ட்ரெய்லர்...ட்விட்டரில் தொடர்ந்து ட்ரெண்டிங்

Listen News!
lathushan / 3 weeks ago
image
Listen News!

ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வெளியான அவதார் திரைப்படம் உலகளவில் மிகப்பெரிய சாதனை படைத்தது. மேலும் இப் படம் வசூலில் மட்டும் இல்லாமல் ஆஸ்கர் விருதுகள் உட்பட ஏராளமான சர்வதேச திரைப்பட விருதுகளையும் வென்றிருந்தது.


இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள அவதார் இரண்டாம் பாகத்தின் ட்ரெய்லர் புதிய சாதனை படைத்துள்ளது. இந்நிலையில் ஹாலிவுட் திரையுலகின் ஜாம்பவான் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில், 2009ம் ஆண்டு வெளியான திரைப்படம் அவதார்.


இந்தப் படம், உலக அளவில் வசூலில் பிரம்மாண்டமான சாதனை படைத்தது. இரண்டாம் பாகத்தை ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்தனர். முதல் பாகம் வெளியாகி 13 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது அவதார் செகண்ட் பார்ட் உருவாகியுள்ளது.


அவதார்- திவே ஆப் வாட்டர் என்ற டைட்டிலில் உருவாகியுள்ள இரண்டாம் பாகம் டிசம்பர் 16ம் தேதி தியேட்டர்களில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் அவதார் திவே ஆப் வாட்டர் ட்ரெய்லரை படக்குழு நேற்று வெளியிட்டது.


மேலும் இப் படத்தின் ட்ரெய்லரை உலகம் முழுவதும் பல லட்சம் பார்வையாளர்களை கடந்துசாதனை படைத்துள்ளது. மேலும் இப் படம் 160 மொழிகளில் வெளியாகவுள்ளது. இப் படம் உலக சாதனை படைக்கும் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.