• Apr 19 2024

"இது தான் எனக்கு விருப்பமான உடை" - சன்னி லியோன் பகிர்ந்த சூப்பர் புகைப்படங்கள்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

பாலிவுட் திரைப்படங்களில் நடித்து இந்தியா முழுவதும் தனக்கான ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி வைத்துக் கொண்டுள்ளவர் நடிகை சன்னி லியோன்.


ஹிந்தி திரைப்படங்கள் மூலம் தனது திரை பயணத்தை சன்னி லியோன் ஆரம்பித்தாலும், இன்று தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளிலும், சன்னி லியோன் கவனம் செலுத்தி  தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளார். 


அது மட்டுமில்லாமல், சில திரைப்படங்களில், ஒரே ஒரு பாடலுக்கு நடனமாடியும் வருகிறார்.டேனியல் வெபர் என்பவரை சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்ட சன்னி லியோன், ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வரும் நிலையில், வாடகைத் தாய் மூலம்,  இரட்டைக் குழந்தைகளையும் பெற்று வளர்த்தும்  வருகின்றார்.


அத்தோடு தனக்கு கிடைத்த புகழ் காரணமாக, எந்த ஒரு பொது நிகழ்ச்சிக்கு, இந்தியாவின் எந்த மாநிலத்தில் சன்னி லியோன் சென்றாலும், அவரைக் காண ரசிகர்கள் கூட்டம் அலை மோதும். சன்னி லியோன் தற்போது முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள 'OMG' படத்தின் சென்னையில் நடந்த டிரெய்லர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார். மேலும் இந்த நிகழ்வு தற்போது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.


இவ்வாறுஇருக்கையில்  நடிகை சன்னி லியோன், தனது டிவிட்டர் பக்கத்தில் புதிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.  நீல நிற ஜீன்ஸ் அணிந்து புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்துள்ளார். மேலும் தற்போது தான் அணிந்துள்ள மேலாடை தனக்கு மிகவும் பிடித்தமானது எனவும் சன்னி லியோன் பதிவு செய்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement