• May 06 2024

யுவன் சங்கர் ராஜாவின் இசைக்கச்சேரியில் நடந்த விபரீதம்- அடடே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்களா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

1997ஆம் ஆண்டு சரத்குமார் நடிப்பில் வெளியான 'அரவிந்தன்' என்கிற படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகியவர் தான் யுவன் சங்கர் ராஜா. இவர் இசையமைப்பாளராக காலடி எடுத்து வைத்த போது இவருக்கு 16 வயது ஆகும்., ஆரம்பத்திலேயே தோல்விகளை கடந்து தான் பின்னர் வெற்றிக்கனியை ருசித்தார். 

இவர் இசையமைத்த முதல் படம் படு தோல்வியை சந்தித்ததால், இவரது இசை கவனிக்கப்படாமல் போனது. தொடர்ந்து  தீனா, நந்தா, பூவெல்லாம் கேட்டுப்பார் போன்ற படங்களில் இவர் இசை வேறு லெவலுக்கு இவரை உயர்த்தியது.


பொதுவாக 90'ஸ் கிட்ஸ்யின் காலர் டியூன் யுவன் ஷங்கர் ராஜாவின் பாடல்கள் தான் உள்ளது. சமீபத்தில் கூட இவர் இசையில் வெளியான திரைப்படங்களான வலிமை, மாநாடு, நானே வருவேன், விருமன் போன்ற படங்களில் இவரது பின்னணி இசை மற்றும் பாடல்கள் சக்க போடு போட்டது.

திரைப்படங்களுக்கு இசையமைப்பதை தாண்டி, பல்வேறு இசை நிகழ்ச்சிகளையும் யுவன் ஷங்கர் ராஜா நடத்தி வருகிறார். அந்த வகையில் கோயம்புத்தூர் சரவணம்பட்டியில் உள்ள எஸ்என்எஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் இசை நிகழ்ச்சி நடந்துள்ளது.இவருடைய நிகழ்ச்சியை காண்பதற்காக அங்கு பலர் திரண்டுள்ளனர்.


பொதுமக்களை கட்டுப்படுத்த அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது. ஆனால் கூட்ட நெரிசல் அதிகமானதால், சரவணம்பட்டி காவல்நிலையத்தில் பணிபுரியும் பெண் எஸ்ஐ உட்பட 5 பேர் லேசான காயம் அடைந்தனர் என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.


Advertisement

Advertisement

Advertisement