• Jan 18 2025

விஜய் அரசியலில் ஜெயிப்பது கஷ்டம்: மீசை ராஜேந்திரன் பேட்டி

Sivalingam / 9 months ago

Advertisement

Listen News!

தமிழ் நாட்டின் தவிர்க்க முடியாத பிரபலங்களில் ஒருவராக  மாறிய தளபதி விஜய் சமீபத்தில் அரசியலில் குதித்தது அனைவருக்கும் தெரிந்ததே.

தளபதி விஜய் தற்போது ’கோட்’ படத்தில் நடித்து வருகின்றார்.  அவர் இன்னும் இரண்டு படங்களோடு நான்  சினிமாவில் இருந்து விலக போகிறேன் என்றும் .அதன் பின் முழுநேர அரசியலில் ஈடுபடப்போகிறேன் என்றும் அறிவித்திருந்தார். அது மட்டுமின்றி  அவர் ஆரம்பித்த கட்சியின் பெயரையும் அறிவித்திருந்தார். 

சமீபத்தில் அவர் ஆரம்பித்த  "தமிழக வெற்றி கழகம் " என்ற கட்சியில் உறுப்பினராக சேருவதற்கான  செயலியை விஜய் அறிமுகபடுத்திய உடன்  ஒரே நேரத்தில் அதிகமானோர் அந்த செயலியை பயன்படுத்தியமையால் செயலி முற்றிலுமாக முடங்கியது. பின்பு இறுதியாக 50 லட்சத்துக்கும் அதிகமானோர் இணைந்துள்ளனர் என்பதும் தெரிவிக்கப்பட்டிருந்தது 

இந்த நிலையில் யூடியூப் தளம் ஒன்றில் பேட்டி கொடுத்த மீசை ராஜேந்திரன் விஜய் அரசியலில் வெல்வது கடினம் என்றும் ,அவருக்கு இன்னும் வயசும் , அனுபவமும் தேவை என்றும் ,அவர் இளசுகளையும் , முதன்முறையாக வாக்களிக்க போகும் மாணவர்களையும் குறிவைத்துள்ளதாகவும் தெரிவித்திருந்தார். 

இது விஜய் ரசிகர்களை கொந்தளிப்பில் ஆழ்த்தி உள்ளது "இவர் லியோ திரைப்படம் வெற்றி அடைந்தால் நான் என் மீசையை எடுப்பேன் என்று பேட்டி ஒன்றில்  சவால் விட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது

Advertisement

Advertisement