• Apr 02 2025

கோமாளியாக அவதாரம் எடுக்கும் ‘தெய்வமகள்’ சீரியல் நடிகை.. இன்னும் யார் யாரெல்லாம் இணைகிறார்கள்?

Sivalingam / 1 year ago

Advertisement

Listen News!

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் விரைவில் ஒளிபரப்பாக இருக்கும் நிலையில் இந்த நிகழ்ச்சியின் ப்ரோமோ வீடியோ சமீபத்தில் வெளியானது என்பதும் இந்த சீசனின் நடுவர்களாக தாமு மற்றும் மாதம்பட்டி ரங்கராஜ் ஆகிய இருவரும் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது என்பதையும் பார்த்தோம்.

இந்த நிலையில் இந்த சீசனின் போட்டியாளர்களாக யூடியூபர் இர்பான், இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த், நடிகை திவ்யா துரைசாமி ஆகியோர்கள் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்பட்டது. அது மட்டும் இன்றி இந்த சீசனின் போட்டியாளர்களாக தொகுப்பாளினி பிரியங்கா, நடிகர் வசந்த், இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா உள்ளிட்டவர்களும் கலந்து கொள்வார்கள் என்றும் அது மட்டும் இன்றி நடிகை வடிவுக்கரசி, பிக் பாஸ் போட்டியாளர் விஷ்ணு விஜய், பாண்டியன் ஸ்டோர்ஸ் ஹேமா ஆகியவர்களுடன் பேச்சு வார்த்தை நடந்ததாக கூறப்பட்டது.


 
அதேபோல் கோமாளிகளாக சுனிதா, புகழ், குரேஷி, மோனிஷா ஆகியவர்களுடன் புதிதாக விஜய் டிவி ராமர், நடிகர் கூல் சுரேஷ் உள்ளிட்டவர்கள் கலந்து கொள்வார்கள் என்று கூறப்பட்டது.

இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவல் படி இந்த சீசனின்  கோமாளிகளில் ஒருவராக தெய்வமகள் சீரியலில் தாரணி கேரக்டரில் நடித்த நடிகை ஷபி என்பவர் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. இவர் ஏற்கனவே ராஜா ராணி, பொம்முக்குட்டி அம்மாவுக்கு போன்ற சீரியலில் நடித்திருந்த நிலையில் தற்போது ஜீ டிவியில் ஒளிபரப்பாகி வரும்மாரிஎன்ற சீரியலில் நடித்த வருகிறார்.

துறுதுறுவென இருக்கும் இவர் கோமாளிக்கு சரியான நபராக இருப்பார் என்று கூறப்படுகிறது. மேலும் நடிகை ஷபி எனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குக் வித் கோமாளி சீசன் 5 ப்ரோமோவை பகிர்ந்து உள்ளதை அடுத்து இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நான் மிகவும் ஆர்வத்துடன் இருக்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement