• Sep 17 2025

விராட் கோலியின் வாழ்க்கையை படமாக்குவதில் விருப்பமில்லை... அனுராக் காஷ்யப் ஓபன் டாக்.!

subiththira / 1 hour ago

Advertisement

Listen News!

இந்திய கிரிக்கெட் அணியின் சூப்பர் ஸ்டார் விராட் கோலி குறித்து வாழ்க்கை வரலாற்று படம் உருவாக்கப்படுவது என்பது ரசிகர்கள், திரையுலக மற்றும் ஊடகங்களில் அடிக்கடி பரபரப்பான செய்தியாக இருந்து வருகிறது. கிரிக்கெட் வீரர் வாழ்வின் பயணம், அவரது சாதனைகள், எதிர்காலம் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை ஆகியவை ரசிகர்களுக்கு மிகப்பெரும் ரசனையாக இருக்கும்.


இந்நிலையில், பிரபல இயக்குநர் அனுராக் காஷ்யப் சமீபத்தில் விராட் கோலியின் வாழ்க்கை வரலாற்று படம் பற்றிய தனது கருத்துகளை வெளிப்படுத்தி, அதனை இயக்க விரும்பாததற்கான காரணங்களை மனம் திறந்து பகிர்ந்துகொண்டார். இந்த கருத்து தற்போது இணையத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட பிரபல இயக்குநர் அனுராக் காஷ்யப், விராட் கோலியின் வாழ்க்கை வரலாற்று படத்தை இயக்க விரும்பவில்லை என்று தெரிவித்துள்ளார். 


மேலும், “விராட் கோலியின் வாழ்க்கை படத்தை நான் இயக்க விரும்பவில்லை ஏனெனில் பல்வேறு மக்களுக்கும் குழந்தைகளுக்கும் அவர் ஏற்கனவே ஹீரோவாக உள்ளார். ஒரு வாழ்க்கை படத்தை இயக்க வேண்டும் என்றால் நான் வேறொருவரை தான் தேர்வு செய்ய வேண்டும். கோலி மிகவும் அழகானவர் மற்றும் அற்புதமான மனிதர்..” என்று கூறியுள்ளார். 

இவ்வாறு கூறியதன் மூலம், விராட் கோலியின் வாழ்க்கை வரலாறு, சாதனைகள், குடும்பம், மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை பல ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கிறது. அதனால் கோலியின் வாழ்க்கையை படமாக்குவதை விரும்பும் பலரும் உள்ளனர். ஆனால் அனுராக் காஷ்யப்பின் கருத்துகள் இதனை ஒரு புதிய பார்வையில் அணுகுகின்றன.

Advertisement

Advertisement