• Nov 07 2025

OTT தளத்தில் இருந்து தூக்கப்பட்ட குட் பேட் அக்லி.!

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

இயக்குநர்  ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், அஜித் குமார் நடித்த படம் தான் குட் பேட் அக்லி. இந்த படத்தில் திரிஷா, அர்ஜுன் தாஸ், பிரசன்னா, பிரியா வாரியார்,  சுனில், சிம்ரன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். 

மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருந்தார்.  இந்த படம் உலக அளவில் சுமார் 230 கோடி வசூல் செய்ததாக கூறப்படுகிறது . இது  அஜித் ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக அமைந்தது. 

இதற்கிடையில் இசையமைப்பாளர் இளையராஜா  தமது மூன்று திரைப்பட பாடல்கள் இந்தப் படத்தில் அனுமதி இன்றி பயன்படுத்தப்பட்டதாகவும் அதற்கு தடை விதிக்குமாறும் உயர் நீதிமன்றத்தில் மனு செய்தார்.  


அதனை ஏற்ற நீதிபதியும்  அப்பாடல்களுக்கு இடைக்காலத் தடை விதித்தார். எனினும் நீதிமன்ற உத்தரவையும் மீறி  குட் பேட் அக்லி படத்தில் தொடர்ச்சியாக பாடல்கள் பயன்படுத்தப்பட்டு வருவதாக இளையராஜா குற்றம் சாட்டினார். 

நெட்பிளிக்ஸ் தளத்தில் ஒளிபரப்பாகும்  குட் பேட் அக்லி படத்தில் இளையராஜாவின் பாடல்கள் நீக்கப்படாமல் இருந்துள்ளது. எனவே  குட் பேட் அக்லி படத்தில் இடம்பெற்ற தனது பாடலை நீக்காவிடில்  நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என  மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்துக்கு இளையராஜா நோட்டீஸ் அனுப்பியுள்ளார். 

இந்த நிலையில்,  நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்திலிருந்து  குட் பேட் அக்லி திரைப்படம் நீக்கப்பட்டுள்ளது. 

Advertisement

Advertisement