• Sep 22 2023

'இப்போ சாத்தினதை சாத்து' பாடலிற்கு.. மீனா கொடுத்த ரியாக்சன்.. விழுந்து விழுந்து சிரித்த அரங்கம்.. சூப்பரான Start music promo..!

Prema / 3 weeks ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் பல ரியாலிட்ரி ஷோக்கள் சூப்பர் ஹிட்டாக ஒளிபரப்பாகி வருகின்றன. அதுமட்டுமல்லாது இதில் ஒளிபரப்பாகும் ரியாலிட்ரி ஷோக்களுக்கென்று தனி ரசிகர் பட்டாளமும் உண்டு. அவ்வாறான நிகழ்ச்சிகளில் ஒன்றுதான் 'ஸ்டார்ட் மியூசிக்'.


இந்நிகழ்ச்சியானது 3சீசன்களை வெற்றிகரமாக கடந்து விட்ட நிலையில் தற்போது இதன் நான்காவது சீசன் ஒளிபரப்பாகி வருகின்றது. இந்த நிகழ்ச்சியினை தொகுப்பாளினி பிரியங்கா தான் தொகுத்து வழங்கி வருகின்றார்.

இந்நிலையில் தற்போது இந்த நிகழ்ச்சியில் இடம்பெற்ற ஒரு சுவாரஷ்ய சம்பவம் குறித்த ப்ரோமோ வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகின்றது. அதாவது இந்த நிகழ்வில் இந்த வாரம் மீனா, ஸ்ரீதேவி, சங்கவி உட்பட 90இல் வெள்ளித்திரையை கலக்கிய கதாநாயகிகள் ஒரு சிலர் கலந்து கொண்டுள்ளனர். 


அந்த சமயத்தில் "இப்போ சாத்தினதை சாத்து.." என்ற பாடல் ஒலிக்க விடப்படுகின்றது. அப்போது மீனா நின்று பர்போமன்ஸ் பண்ணி பாடலைக் கண்டு பிடிக்க உதவுகின்றனர். ஆனால் இறுதிவரைக்கும் சங்கவி அது என்ன பாடல் என்பதைக் கண்டுபிடிக்கவேயில்லை. 


இருப்பினும் மீனா கொடுத்த ரியாக்ஷனையும், சங்கவி சொன்ன பதிலையும் கேட்ட அரங்கமே விழுந்து விழுந்து சிரிக்கின்றது. இதை அவதானித்த பிரியங்கா மீனாவிடம் வந்து தனக்கும் டான்ஸ் சொல்லிக் கொடுக்குமாறு கூறுகின்றார். மீனாவும் சங்கவியுடன் இணைந்து டான்ஸ் பண்ணுகின்றார்.

இதோ அந்தப் ப்ரோமோ வீடியோ..!


Advertisement

Advertisement

Advertisement