• Jul 14 2026

சிந்தாமணியை கவுக்க மீனா போட்ட திட்டம் தவிடுபொடியானது.! சாதித்த ரோகிணி

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட்டில், வீட்டிற்கு வந்த முத்துவின் மீனாவும் அண்ணாமலையிடம், “நீங்கள் மனோஜ்க்கு ஆதரவாக கையெழுத்து ஒன்றைப் போட்டுத் தந்தால், அவனை வெளியே எடுப்பதற்கு உதவும்” எனக் கூறி, அவரிடம் இருந்து ஒரு கடிதத்தை வாங்கி எடுக்கின்றார்கள்.

அதன் பின்பு, ரோகிணி  பைனான்சியரிடம் சென்று மனோஜ் கேஸை வாபஸ் வாங்கும்படி கேட்கின்றார். ஆனால் அவர் சிந்தாமணிக்கு கால் செய்ய, இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ரோகினியிடம் 10 லட்சம் வாங்கி எடுக்குமாறு ஐடியா கொடுக்கின்றார். அதன்படி, அவரும் “10 லட்சம் தந்தால் மனோஜை ஜாமினில் எடுக்கின்றேன்” என்று கூறுகின்றார்.

இதனால், ரோகிணி  க்ரிஷின் பெரியப்பா வீட்டிற்கு சென்று நிலைமையை கூறி பத்து லட்சம் கேட்கின்றார். ஆனால் அவர்கள் தன்னிடம் இப்போது 5 லட்சம் தான் இருக்கின்றது என்று கூறி கொடுத்து அனுப்புகின்றார்கள்.

இன்னொரு பக்கம், மீனா சிந்தாமணிக்கு எதிராக பாதிக்கப்பட்ட ஆட்களை திரட்டி வாக்குமூலம் வாங்குகின்றார். இந்த விடயம் சிந்தாமணியின் காதுக்குப் போகவே அவர் அதிர்ச்சியடைகின்றார்.

அந்த நேரத்தில் அங்கு ரோகிணி  வந்து, ஐந்து லட்சம் ரூபாய் பணம் புரட்டியதாகவும், “நீங்கள் பைனான்சியரிடம் பேசி கேஸை வாபஸ் வாங்கச் சொல்லுங்கள்” எனக் கூறுகின்றார்.

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திய சிந்தாமணி, பைனான்சியருக்கு கால் செய்து, “ரோகிணிக்காக கேஸை வாபஸ் வாங்கியதாக போலீஸ் ஸ்டேஷனில் வைத்து கூறுங்கள், மீனாவுக்காக வாங்கியதாக இருக்கக் கூடாது” எனக் கூறுகின்றார். இதுதான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement