விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கென்று எப்போதுமே ஒரு ரசிகர் கூட்டம் உண்டு. அவ்வாறு பல்லாயிரக்கணக்கான ரசிகர்களை கவர்ந்த ஒரு ஹிட் சீரியல் தான் 'காற்றுக்கென்ன வேலி'. இந்த சீரியல் ஆனது முழுக்க முழுக்க கல்லூரியை மையப்படுத்தி உருவாக்கப்பட்டு வருகிறது.
இந்த சீரியலின் கதைப்படி தற்போது வெண்ணிலா கழுத்தில் சூர்யா முறைப்படி தாலி கட்டியுள்ளார். இந்நிலையில் இன்றைய நாளுக்கான ப்ரோமோ வீடியோ வெளியாகி இருக்கின்றது. அதில் வெண்ணிலா, சூர்யா மற்றும் குடும்பத்தினர் வீட்டிற்குச் செல்கின்றனர்.
அப்போது வீட்டு வாசலில் நின்ற மீனாட்சி "இது என் வீடு, இனிமேல் உங்களுக்கு இந்த வீட்டில் வேலையே இல்லை, உங்க பொட்டி படுக்கை எல்லாம் கட்டி வைக்க சொல்றேன், அப்புறமாக வந்து எடுத்துக்கோங்க, இப்போ வீட்டு வாசலில் நிற்காமல் கிளம்புங்க" எனக் கூறி சூர்யாவையும் குடும்பத்தினரையும் வீட்டை விட்டுத் துரத்துகின்றார்.
பதிலுக்கு சூர்யா "இதை விட பெரிய பங்களாவை கட்டி, சொத்து பத்துன்னு சேர்த்து நாம வாழ்ந்து காட்டலாம்" என சவால் விடுகின்றார். அதற்கு வெண்ணிலா "கார் சாவியைக் கொடுங்க" என வாங்கி அந்தக் கார் சாவியையும் மீனாட்சியிடம் கொடுத்து விட்டு "இங்க இருந்து ஒரு சின்னத் துரும்பு கூட எங்களுக்கு வேணாம்" எனக்கூறி விட்டு காரையும் அங்கே விட்டு விட்டு, மற்றவர்களையும் கூட்டிக் கொண்டு நடந்து செல்கின்றார்.
இதோ அந்தப் ப்ரோமோ வீடியோ..!
Listen News!