கண்ணீர் மல்க கையில் கணவரின் அஸ்தியுடன் மீனா-படங்கள் இணைப்பு..!

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் நடிகை மீனா. தென்னிந்திய சினிமாவின் அத்தனை டாப் ஹீரோக்களுடனும் ஜோடி சேர்ந்து நடித்து பட்டையை கிளப்பி இருந்தார்.

டாப் ஹீரோயினாக இருந்த மீனா தற்போது பிரபலமான துணை நடிகராகவும் இருந்து வருகிறார். தமிழ், தெலுங்கு, மலையாளத்தில் பல படங்களில் பிஸியாக நடித்து வருகின்றார் மீனா.

இந்நிலையில் நேற்று மாலை அவரது கணவர் வித்யாசாகர் திடீரென உடல்நலக்குறைவால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கொரோனாவிற்கு பிந்தைய பாதிப்புகளால் நுரையீரல் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்துள்ளார் வித்யாசாகர். கடந்த சில நாட்களாக அவரது உடல்நிலை மோசமடைந்ததை அடுத்து சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

மேலும் டாக்டர்கள் அறிவுறுத்தலின் பேரில் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய ஏற்பாடுகள் செய்து வந்துள்ளனர். ஆனால் அதற்குள் அவரது உடல்நிலை மோசமடைந்து, ஆபத்தான நிலைக்கு சென்றதால் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்துள்ளனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை வித்யாசாகர் உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு இருக்கையில் ஆம்புலன்சில் அவரது திருவுருவ புகைப்படம் மாட்டி உடல் மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்ட போது வழி நெடுகிலும் திரை பிரபலங்களும் ரசிகர்களும் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். முன்னணி நடிகர்கள் பலரும் மீனாவின் கணவர் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டு அவருக்கு இறுதி மரியாதை செலுத்தினர்.

உறவினர்களும் பிரபலங்களும் பெசன்ட் நகரில் உள்ள தகண மையத்தில் சரியாக 3.30 மணியளவில் தகணம் செய்யப்பட்டு விட்டது என கூறப்படுகின்றது.

இந்நிலையில் மீனாவின் கணவரின் உடல் தகனம் செய்யப்பட்ட நிலையில் அவரது அஸ்தியை வாங்கிக்கொண்டு மீனா செல்கின்றார்.

அத்தோடு இவரின் இந்த பரிதாப நிலையைப் பார்த்து ரசிகர்களும் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

RELATED ARTICLES

spot_img
spot_img

அதிகம் படித்தவை

திரை விமர்சனம்