• May 05 2024

17வயதில் திருமணம்-பல காதலர்களுடன் உல்லாசம்: பிக்பாஸ் வீட்டுக்குள் இருக்கும் போட்டியாளரின் உண்மை முகம்!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் சீசன்-6 ஆரம்பமாகி மிகவும் விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கையில் பிக்பாஸ் நடிகை ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து வெளியான தகவல்பலரையும் அதிர வைத்துள்ளது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பல போட்டியாளர்கள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர். அதில் சீரியல்கள் மூலம் பிரபலமான நடிகை ஆயிஷாவும் ஒருவர். ஆரம்பத்திலேயே பிக் பாஸ் வீட்டில் இவருடைய நடவடிக்கைகள் யாருக்கும் பிடிக்காமல் இருந்தது. ஏனென்றால் அதிகப்படியாக குரலை உயர்த்தி பேசுவது, சண்டை போடுவது என்று அவருடைய செயல்கள் அனைவருடைய  வெறுப்பை சம்பாதித்து வருகிறது.

அதிலும் கடந்த வாரம் கமல் முன்பு அவர் மரியாதை குறைவாக பேசியதும் ரசிகர்களை கொதிப்படைய வைத்துள்ளது. இவ்வாறுஇருக்கையில் ஆயிஷாவின் முன்னாள் காதலன் அவரைப் பற்றிய பல உண்மைகளை புட்டு புட்டு வைத்துள்ளார். அதாவது கேரளாவை சேர்ந்த ஆயிஷாவுக்கு 17 வயதிலேயே திருமணம் நடந்து அது தோல்வியில் முடிந்திருக்கிறது. அதன் பின்னர் மீண்டும் ஒரு திருமணம் செய்த அவருக்கு அதுவும் நிலைக்கவில்லை.

அதன் பின்னர் அவருக்கு ஏகப்பட்ட காதல் இருந்ததாகவும், இப்போது வரை அவர் முதல் திருமணத்தில் இருந்து விவாகரத்து பெறவில்லையாம். அத்தோடு சென்னையில் கல்லூரியில் படிக்கும் போது ஒரு உதவி இயக்குநரை விரும்பிய ஆயிஷா அவருக்காக வீட்டை விட்டும் ஓடி வந்திருக்கிறார். கிட்டத்தட்ட மூன்று வருடங்கள் அவருடன் காதலில் இருந்து ஆயிஷாவுக்கு சீரியல் வாய்ப்புகள் வாங்கி கொடுத்ததெல்லாம் அவருடைய முன்னாள் காதலர் தானாம்.

பின்னர்  ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சத்யா தொடரில் நடிக்க ஆரம்பித்த பொழுது தன்னுடைய காதலரை பிரேக் அப் செய்துவிட்டு அதே சீரியலின் ஹீரோவான விஷ்ணுவுடன் நெருங்கி பழகி உள்ளார். ஆனால் அதுவும் நீடிக்காமல் பிரேக்கப்பில் முடிந்திருக்கிறது. அதன் பிறகு ஆயிஷா தற்போது ஒருவரை காதலித்து வருகிறார்.

அவரும் ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து பெற்றவர். ஆனால் இந்த காதலும் எத்தனை நாளைக்கு நீடிக்கும் என்று தெரியவில்லை. ஏற்கனவே வெறுப்பை சம்பாதித்து வரும் ஆயிஷா தற்போது வெளிவந்திருக்கும் உண்மைகளால் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறார். மேலும் அவருடைய வாழ்க்கையின் மறுபகுதி ரசிகர்கள் பலரையும் அதிர்ச்சியாக்கி இருக்கிறது.


Advertisement

Advertisement

Advertisement