தென்னிந்திய சினிமா ரசிகர்களிடையே முக்கிய இடத்தைப் பெற்ற “கர்ணன்” படம் குறித்து சமீபத்தில் நடிகர் நட்டி கூறிய கருத்துகள் தற்பொழுது வைரலாகி வருகின்றன.
நேர்காணலில் நட்டி கூறியதாவது, “கர்ணன் படத்தில் ஊர் மக்களை அடிக்கிற சீன்ல நான் நடிக்க மாட்டேன்னு சொன்னப்போ... மாரி செல்வராஜ் ஒரு டம்மி ஸ்டிக்கை எடுத்து அவரோட அசிஸ்டெண்டை அடிச்சு வலிக்குதான்னு கேட்டார். அந்த தம்பி இல்ல சார்ன்னு சொல்லிட்டுப் போய்ட்டார்.

ஆனா அவரு போனதுக்கு அப்புறம் வலி தாங்க முடியாமல் துடிச்சிட்டு இருந்தார். நான் ஏன் வலிக்குதுன்னு சொல்லாமல் இருந்தனீங்க என்று கேட்டதுக்கு, ஒன்னு ரெண்டு அடி படத்தான் சார் செய்யும் என்ன பண்றதுன்னு ரொம்ப எதார்த்தமா சொன்னார். அந்த தம்பியோட உழைப்பைப் பார்த்து நான் மிரண்டு போய்ட்டன்."என்று பகிர்ந்துள்ளார்.
இந்த நிகழ்வு, திரைப்பட தயாரிப்பின் பின்னணி வேலைகளில் நடக்கும் உண்மை மற்றும் மனிதர்களின் உழைப்பை வெளிப்படுத்துகிறது. திரையுலகில் பின்னணி குழுவினர்கள், அசிஸ்டெண்ட்கள், ஸ்டண்ட் கோஆர்டினேட்டர்கள் மற்றும் தொழில்நுட்ப குழுவினர் எவ்வளவு கடுமையாக உழைக்கிறார்கள் என்பதைக் காண்பிக்கிறது.
Listen News!