• Jan 19 2025

பிச்சைகாரனிடமே பிச்சையெடுத்த மனோஜ்... எதை தெரியுமா? இறுதியில் நடந்த ட்விஸ்ட்

Aathira / 9 months ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியில் பிரபலமாக ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று என்ன நடக்கும் என்பதற்கான எபிசோட் வெளியாகி உள்ளது. அதில் என்ன நடக்குது என பார்ப்போம்.

அதில், மனோஜை சாமியாரிடம் கூட்டிக் கொண்டு உள்ளே தியானத்தில் இருக்கும் சாமியாரிடம் அவரது நண்பர் செல்ல, சாமியார் முன்னிலையில் மனோஜ் அவரிடம் கேள்வி கேட்டுக் கொண்டிருக்கிறார். இதை பார்த்த சாமியார் கண் முழித்ததும் மனோஜ் பற்றி அவ்ரின் நண்பர் சாமியாருக்கு சொல்ல, அதற்கு முதலில் நான் சாமியாரிடம் பேச வேண்டும் என, உங்களுக்கு இதுல எத்தனை வருஷம் எக்ஸ்பீரியன்ஸ் இருக்கு, இதுல டேட்டா வச்சிருக்கீங்களா, எத்தனை பேருக்கு சொன்னது நடந்திருக்கு என சாமியாரையே இன்டர்வியு எடுக்கிறார் மனோஜ்.

இதை பார்த்து கோவமான சாமியார் உனக்கு யாராலயும் பிரச்சினை இல்லை. உண்ட வாயால தான் உனக்கு பிரச்சனை இந்த வாய மூடிட்டு இரு என சொல்லி, நீ கனடா போகணும் அதுக்கு காசு இல்ல அது தானே உண்ட பிரச்சனை என சொல்ல மனோஜ் ஷாக் ஆகிறார். எல்லாம் சரியாகனும் என்றால் நீ நான் சொன்ன இடத்தில் போய் பிச்சை எடுக்கணும். எல்லாமே நீ பிச்சை எடுத்தால்தான் நீ அடுத்தவனுக்கு யாசகம் கொடுக்கலாம் என்று மனோஜ்க்கு பிச்சை எடுக்குமாறு பரிகாரம் சொல்லி அனுப்புகிறார் சாமியார்.


இதைத்தொடர்ந்து மனோஜின் நண்பர் அவரை கோயில் ஒன்றுக்கு கூட்டி வந்து அவருக்கு பிச்சை எடுப்பதற்காக கிழிந்த உடுப்பையும் முகத்தில் கரியும் பூசி தட்டையும் கொடுத்து அனுப்புகிறார். மனோஜூம் வேறு வழியின்றி பிச்சை எடுப்பதற்காக அங்கு உள்ளவர்களுடன் இருக்க, அவர்கள் வேறு இடம் பார்த்து போகுமாறு சொல்லுகிறார்கள். ஆனாலும் நான் பரிகாரத்திற்கு வந்திருக்கேன் இன்னைக்கு மட்டும் தான் இருப்பேன் என சொல்லுகிறார் மனோஜ்.

இதை தொடர்ந்து மனோஜ்க்கு பக்கத்தில் இருக்கும் நபர் பிச்சை எடுப்பது பற்றி  சொல்லிக் கொடுக்கிறார். அந்த நேரத்தில் மனோஜ்க்கு பசி வர பக்கத்துல கடை இருக்கா என்று கேட்க, கடை இல்ல இரு ஆர்டர் பண்ணுவோம் என்று ஆன்லைனில் ஆர்டர் பண்ணி சாப்பாடு வாங்குகிறார். அந்த சாப்பாட்டில் ஒன்றை மனோஜ்க்கு கொடுக்க மனோஜ் அதனை சாப்பிட எடுக்கிறார். இதன் போது மனோஜின் பிரண்ட் கால் பண்ணி உன்னை சாமியார் 6:00 மணி வரைக்கும் சாப்பிட வேண்டாம் என்று தானே  சொன்னவர் என ஞாபகப்படுத்த, சாப்பாட்டை அந்த பிச்சைக்காரர் இடமே கொடுத்துவிட்டு மீண்டும் பிச்சை எடுக்க சொல்கிறார்.

இதை தொடர்ந்து மனோஜ் பிச்சை எடுத்துக் கொண்டு இருக்க, அந்த கோயிலுக்கு மீனா வருகிறார். மீனா வருவதை பார்த்த மனோஜ் தலையில் துண்டை போட்டு மறைத்துக் கொள்கிறார். மீனா கோயில் வாசலின் மேலே ஏறி செல்லும்போது மீண்டும் திரும்பி பார்த்து கீழே வருகிறார். இவ்வாறு இன்றைய எபிசோடு காட்டப்படுகிறது.

Advertisement

Advertisement