• Apr 27 2024

ஹாடர்ன் ஏரியாவில் வந்து கடுப்பேற்றிய மணிகண்டன்- குடையால் வெளுத்து வாங்கிய மைனா நந்தினி

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழில் தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் ஆறாவது சீசனில் ஒவ்வொரு எபிசோடும் அசத்தலாக சென்று கொண்டிருக்கின்றது.இந்த வாரம் நடைபெற்று வரும் டாஸ்க்கில் போட்டியாளர்கள் ஏலியன்களாகவும், ஆதிவாசியாகவும் இரு அணிகளாக பிரிந்து விளையாடி வருகின்றனர். 

இதில் ஏலியன் அணியினர் வீட்டின் உள்ளேயும், ஆதிவாசி அணியினர் கார்டன் ஏரியாவிலும் இருக்க வேண்டும். ஏலியன் அணியினர் ஆதிவாசி அணியினரிடம் இருந்து கல்லையும், ஆதிவாசி அணியினர் ஏலியன் அணியில் இருந்து பூவையும் கைப்பற்றுவதே டாஸ்க் ஆகும்.

இதனை போட்டியாளர்கள் சண்டை சச்சரவுகளுடன் விளையாடி வருகின்றனர். அதிலும் குறிப்பாக அசீம் மற்றும் அமுதவாணனுக்கிடையிலான மோதல் அடிதடி வரை சென்றுள்ளது.இதனால் இந்த வாரம் அசீமுக்கு ரெட் காட் கொடுக்கப்பட்டு வெளியேற்றப்பட வேண்டும் என ஹவுஸ்மேட்ஸ் கூறி வருகின்றனர்.

இது ஒரு புறம் இருக்க ஏலியன்ஸ் அனியின் பூக்கள் அனைத்தையும் அசீம் களவாடி விட்டார்.இதனால் ஆதிவாசிகளின் கற்களை எடுக்க போட்டியாளர்கள் விளையாடி வருகின்றனர். இந்த சந்தர்ப்பத்தில் ஆதிவாசிகளின் கற்களுக்கு பக்கத்தில் வந்து மணிகண்டன் உடற்பயிற்சி செய்கின்றார். இதனால் கடுப்பான மைனா குடை எடுத்து  அடித்துள்ளார். இது குறித்த வீடியோ வைரலாகி வருவதைக் காணலாம்.



Advertisement

Advertisement

Advertisement