• Apr 24 2024

என்ன கலர் சார் இது...? தலை முடியின் நிறத்தைத் திடீரென மாற்றிய அஜித்... வைரலாகும் புகைப்படம்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களின் வரிசையில் வெற்றி நாயகனாகத் திகழ்ந்து வருபவர் நடிகர் அஜித். இவர் நடிப்பில் வருடா வருடம் குறைந்தது ஒரு படம் ஆவது வெளியாகிய வண்ணம் தான் இருக்கின்றது. அந்த வகையில் ரசிகர்கள் அனைவரும் தற்போது பொங்கலுக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள். 

அதற்கான முக்கிய காரணம் வேறெதுவுமில்லை. அதாவது 2023-ஆம் ஆண்டு பொங்கல் பாக்ஸ் ஆபிஸில் வேறொரு சாதனையை அஜித்தின் படம் படைக்க இருக்கிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அந்தவகையில் இத்தினத்தில் அஜித்தின் 'துணிவு' மற்றும் விஜய்யின் 'வாரிசு' என இரண்டு படங்களும் வெளியாக இருக்கிறது.


அதிலும் குறிப்பாக வாரிசு படத்தை விட துணிவு படத்திற்கு தமிழகத்தில் அதிக திரையரங்குகள் கிடைத்திருக்கின்றது. இதனால் இப்படம் பெரிய வசூல் சாதனை படைக்கும் என்ற நம்பிக்கையில் ரசிகர்கள் உள்ளார்கள். 

இந்நிலையில் தற்போது அஜித் துணிவு பட லுக்கை மாற்றி மிகவும் ஸ்மார்ட் ஆக மாறியுள்ளார். அந்தவகையில் சமீபத்தில் தாடி எல்லாம் எடுத்து ரசிகருடன் அவர் எடுத்த புகைப்படம் ஒன்று வைராலாக, அதனைத் தொடர்ந்து இப்போது அவர் சீரியல் நடிகை ஒருவருடன் புகைப்படம் எடுத்துள்ளார்.


அந்த நடிகையுடன் அஜித் குடும்பத்துடன் எடுத்த புகைப்படம் வெளியாக அதில் அஜித்தின் தலைமுடி நிறம் மாறியிருக்கிறதை கண்டு ரசிகர்கள் இதுவும் செமயாக இருக்கிறது என தங்களுடைய கமெண்ட்டுகளைத் தெரிவித்து வருவதோடு அப்புகைப்படத்தை வைரலாக்கியும் வருகின்றனர்.


Advertisement

Advertisement

Advertisement