• May 05 2024

மணிரத்னம் என்னை மட்டம் தட்டினார்..பார்த்திபன் கூறிய தகவலால் ஷாக்கடைந்த பிரபலங்கள்-நடந்தது என்ன..?

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

மணிரத்னம் இயக்கத்தில் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன். இப்படத்தில், விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, பார்த்திபன், சரத்குமார், பிரகாஷ் ராஜ். விக்ரம் பிரபு, ஜெயராம், ஜஸ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வர்யா லக்ஷிமி,பழம்பெரும் நடிகை ஜெயசித்ரா ஆகிய முக்கிய நட்சத்திரங்கள் இதில்  முக்கிய ரோலில் நடித்துள்ளனர்.

தமிழ், தெலுங்கு, மலையாளம்,கன்னடம்,இந்தி என பான் இந்தியப்படமாக உருவாகி உள்ள இப்படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார்.இப் படத்தின் ட்ரைலர் நேற்று வெளியிடப்பட்டது. கமலஹாசனின் கர்ஜனை குரலில் வெளியான ட்ரைலர் ரசிகர்களை பிரம்மிப்பில் ஆழ்த்தியது என்று தான் கூற வேண்டும். நேற்று இரவு வெளியான டிரைலர் யூடியூபில் டிரெண்டிங்கில் உள்ளது.



நேற்று நடந்த இசை விழாவில் ரஜினிகாந்த், கமலஹாசன், ஷங்கர் என பிரபலங்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.இப் படத்தின் டிரைலர் கமல்ஹாசன் வெளியிட்டு, இந்த படத்தில் வந்தியத்தேவன் கதாபாத்திரத்தில் நான் நடிக்க ஆசைபட்டேன் ஆனால், அது முடியாமல் போனது, வந்தியத்தேவனாக நடிக்கும் கார்த்திக்கு வாழ்த்து கூறினார்

முன்னதாக இந்த இசை வெளியீட்டு விழாவில் பேசிய பார்த்திபன் தனக்கே உரிய குசும்புடன் தமிழ்,தெலுங்கு, கன்னடம், மலையாளம் கன்னடத்தில் வணக்கம் சொன்ன பார்த்திபன்,இந்தியிலேயே எனக்கு இந்தி தெரியாது என்றார். இதை பார்த்துக்கொண்டிருந்த அரங்கே கை தட்டி ஆரவாரம் செய்தது. மேலும் இந்த நகைச்சுவைக்கு கமலும்,ரஜினியும் கைதட்டி சிரித்தனர்.



இதனை தொடர்ந்து பேசிய பார்த்திபன், இது ஒரு சரித்திரநாள் 1955ம் ஆண்டு வெளியான ஒரு சரித்திர புத்தகம் இன்று ஒரு திரைப்படமாக மாறியிருக்கிறது. அதில் நானும் ஒரு சிறுபங்காக இருப்பதில் மிகப்பெரிய மகிழ்ச்சி அடைகிறேன் என்று கூறினார். மணிரத்தினம் ஷூட்டிங்கை தொடங்கினா எப்போ முடிப்பாருனே தெரியாது அந்த அளவுக்கு நடிகர்களுக்கு செம டஃப் கொடுப்பாரு.



என்னத்தான் ஷூட்டிங் நைட் அண்ட் டே நடந்தாலும், மணிரத்னத்தின் எனர்ஜியை பார்க்கும் ஒரு உற்சாகம் பிறக்கும். அந்த உற்சாகத்தை அப்படியே முகத்தில் கொண்டு வந்து ஒரு எக்ஸ்பிரஷன்ஸ் கொடுத்தா? இவ்வளவு எக்ஸ்பிரஷன்ஸ் எடுத்து குறைச்சுச்கோ என்று மணிரத்தினம் மட்டம் தட்டினார். மட்டம் தட்டினார் என்றால் குறைத்து சொல்வது இல்லை செங்கலை சமப்படுத்துவதற்கு மட்டம் தட்டுவாங்களே அதுபோல நடிகர்களை மட்டம் தட்டினார் என்று குறிப்பிட்டார்.




Advertisement

Advertisement

Advertisement