• Nov 05 2025

10 வருட பழைய பாலியல் வழக்கில் திடீர் திருப்பம்...!மலையாள நடிகை மினு முனீர் கைது..!

Roshika / 2 months ago

Advertisement

Listen News!

மலையாள திரைப்பட நடிகை மினு முனீர், சிறுமி மீதான பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான 10 வருட பழைய வழக்கில் கேரளாவில் கைது செய்யப்பட்டார். சென்னை திருமங்கலம் அனைத்து மகளிர் பொலிஸார் நடத்திய விசாரணையின் பின்னர், அவர் கேரளாவில் இருந்து கைது செய்யப்பட்டு சென்னைக்கு அழைத்து வரப்பட்டார்.


வழக்கின் தகவலின்படி, 10 வருடங்களுக்கு முன்பு, நடிகை மினு முனீர் தனது உறவினரின் 14 வயது மகளை திரைப்பட வாய்ப்பு அளிப்பதாகக் கூறி சென்னைக்கு அழைத்து வந்ததாக கூறப்படுகிறது. ஆனால், அந்தச் சிறுமி சென்னைக்கு வந்த பிறகு, நான்கு பேர் கூட்டு பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.


பாதிக்கப்பட்ட பெண், தற்போது வயதுக்கு வந்த நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு சென்னை திருமங்கலம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் விசாரணை தீவிரமாக நடந்து வருகிறது.

இதையடுத்து, திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் துறை அதிகாரிகள் கேரளா சென்று, மினு முனீரை கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்துள்ளனர். அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

Advertisement

Advertisement