• May 01 2024

அனுஷ்காவின் மாஜி காதலனுடன் ஜோடி சேரும் மாளவிகா மோகனன்- வேற லெவலில் அடித்த ஜாக்பாட்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் ரஜினியின் பேட்ட படத்தில் முக்கிய கதாபாத்திரத்தை ஏற்று நடித்ததன் மூலம் அறிமுகமாகியவர் தான் நடிகை மாளவிகா மோகனன்.இவர் இதனைத் தொடர்ந்து தளபதி விஜய்யின் மாஸ்டர் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகினார்.

இதனைத்தொடர்ந்து தனுஷுடன் இணைந்து மாளவிகா, மாறன் படத்தில் கதாநாயகியாக நடித்தார்.ஆனால், இப்படம் படுதோல்வியடைந்தது.இதை தொடர்ந்து தற்போது விக்ரம் நடித்து வரும் தங்களான் படத்தில் நடித்து வருகிறார்.இப்படத்திற்காக கடுமையான பயிற்சிகளை கூட மாளவிகா மேற்கொண்டு வருகிறாராம்.


இந்நிலையில், நடிகை மாளவிகா மோகனன் அடுத்ததாக பாகுபலி நடிகர் பிரபாஸ் உடன் இணைந்து நடிக்கவிருக்கிறாராம்.மாருதி இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் ஹீரோவாக பிரபாஸ் நடிக்க அவருக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்கவிருக்கிறார்.

இதை மாளவிகா மோகனனே சமீபத்தில் ரசிகர்களுடன் சமூக வலைத்தளத்தில் கலந்துரையாடிய போது கூறியுள்ளார் .இதனால் ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement