• May 04 2024

மண்டை உடைச்ச மகேஸ்வரி... பிக்பாஸ் வீட்டில் நடந்த பரபரப்பு சம்பவம்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

பிரபல தொலைக்காட்சி சேனல்களில் ஒன்றாகிய விஜய் டீவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் அதிகளவான ரசிகர்களைக் கொண்ட நிகழ்ச்சி என்றால் அது 'பிக்பாஸ்' தான். இதனை உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகின்றார்.


இந்நிகழ்ச்சியானது 5 சீசன்களை வெற்றிகரமாக கடந்து விட்ட நிலையில், சீசன் 6ஆனது தற்போது ஆரம்பமாகி இருக்கின்றது. இந்நிகழ்ச்சியானது தற்போது விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் அமுதவாணன், ஜி.பி. முத்து, ஷாந்தி, ஜனனி, ஆயீஷா, ராபர்ட் மாஸ்டர் உள்ளிட்ட 20 போட்டியாளர்கள் கலந்துகொண்டு அசத்தி வருகின்றார்கள்.


இந்த 20 போட்டியாளர்களில் பரபரப்புக்கு பஞ்சமில்லாத போட்டியாளராக இருப்பவர் விஜே மகேஸ்வரி. இவர் மற்றவர்களுடன் செய்யும் வாக்குவாதமானது சர்ச்சைக்குரிய ஒன்றாக ரசிகர்கள் மத்தியில் மாறி வந்த வண்ணமே இருக்கின்றது. அதுமட்டுமல்லாமல் இந்நிகழ்ச்சியை விறு விறுப்பிற்கு பஞ்சமில்லாமல் கொண்டு செல்கின்ற ஒருவராகவும் மகேஸ்வரி இருக்கின்றார்.


இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று நடைபெற்ற டாஸ்க் ஒன்றில் விஜே மகேஸ்வரியின் தலையில் அடிபட்டு காயம் ஏற்பட்டுள்ளது. அதாவது டாஸ்கில் Buzzer அழுத்த முயன்றபோது மகேஸ்வரிக்கு இந்தக் காயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

இது குறித்த புகைப்படமானது வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் ஷாக்காகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதோ அந்த புகைப்படம்..


Advertisement

Advertisement

Advertisement