• May 04 2024

லவ் யூ சோ மச் நீ இல்லாமல் நான் இல்லை- துல்கருக்கு குடும்பத்துடன் பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவித்த நடிகை நஸ்ரியா

stella / 1 year ago

Advertisement

Listen News!

மலையாள சினிமாவில் முக்கிய நடிகராக வலம் வருபவர் தான் துல்கர் சல்மான்.மலையாளத்தில் சிறப்பான படங்களில் நடித்து ரசிகர்களின் விருப்பத்திற்குரிய ஹீரோவாக இருந்து வருகின்றார். மலையாளம் மட்டுமில்லாமல் தமிழிலும் இவர் ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ஓகே கண்மணி படத்தில் சிறப்பாக நடித்து தமிழில் தனக்கான ஓர் அடையாளத்தை உருவாக்கிக் கொண்டார்.தொடர்ந்து கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படமும் இவருக்கு சிறப்பாக அமைந்தது.

சமீபத்தில் காஜல் அகர்வால், அதிதி ராவ் உள்ளிட்டவர்களுடன் இணைந்து ஹே சினாமிகா என்னும் படத்தில் நடித்திருந்திருந்தார்.

இந்நிலையில் இன்றை தினம் தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடி வருகிறார் துல்கர்.இதையொட்டி திரைத்துறை பிரபலங்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். நடிகர் ஃபஹத் பாசில் மற்றும் அவரது மனைவி நஸ்ரியாவும் துல்கருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளனர்.

அவர் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் பிறந்தநாள் வாழ்த்துக்கள் பம். லவ் யூ சோ மச். நீ இல்லாமல் நான் இல்லை. நீ இல்லாமல நான் என்ன செய்வேன், நீ இல்லாமல் என்னால் எதுவும் செய்ய முடியாது என்று தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement