• May 18 2024

விஷ்ணு விஷாலைத் தொடர்ந்து நிர்வாணமாக போட்டோ ஷுட் நடத்திய சின்னத்திரை பிரபலம் சரத்

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பான 'கலக்கப்போவது யாரு'என்னும் நிகழ்ச்சி மூலம் பிரபல்யமானவர் தான் சரத். இதனைத் தொடர்ந்து பல நிகழ்ச்சிகளில் பங்கேற்ற இவர் கனா காணும் காலங்கள் தொடரிலும் முக்கிய கதாப்பாத்திரத்திலும் நடித்துள்ளார்.

இது தவிர டி.ஆர்.பி மிஷினான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாகவும் கலந்து கொண்டார். இதனைத் தொடர்ந்து முதன்முறையாக காதல் மனைவியுடன் மிஸ்டர் அன்ட் மிஸ்சர்ஸ் சின்னத்திரை சீசன் 3ல் பங்கு பற்றி ரைட்டில் வின்னர் ஆனார்.

இது தவிர டிவி தொகுப்பாளர், காமெடியன், நடிகர் என பல திறமைகளைக் கொண்டவரதக வலம் வருகின்றார்.சமீபத்தில் வெளியான சிம்புவின் சூப்பர் ஹிட் மாநாடு படத்திலும் நடித்திருந்தார்.சோஷியல் மீடியாவிலும் ஆக்டிவாக இருக்கும் சரத், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து தான் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளின் போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருபவர்.

இந்த நேரத்தில் இன்று அவர் வெளியிட்டுள்ள போட்டோ அனைவரையும் ஷாக்காகி உள்ளது. படுக்கையில் நிர்வாணமாக படுத்திக்கும் பிளாக் அன்ட் ஒயிட் போட்டோவை வெளியிட்டுள்ளார்.

முதலில் இதை பார்த்த பலரும் உடம்பு சரியில்லாமல் உள்ளார் என நினைத்து, விரைவில் குணமடைய வாழ்த்துக்கள் என வாழ்த்தி கமெண்ட் செய்தனர். ஆனால் சிறிது நேரத்திலேயே போட்டோவை நன்கு கவனித்து பார்த்த பலர், என்ன நீங்களும் டிரெண்டிங் லிஸ்டில் சேர்ந்துட்டீங்களா. மனசுல பெரிய ரன்வீர் சிங்குன்னு நினைப்பா? விஷ்ணு விஷாலை தொடர்ந்து நீங்களும் இப்படி ஒரு போட்டோவை வெளியிட்டுள்ளீர்களே.

நீங்களும் சரத்…இப்படியெல்லாம் பண்ணினா பிரபலம் ஆக முடியாது. வழக்கு தான் பாயும் என நெட்டிசன்கள் கேட்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement