• Dec 07 2024

இந்த ஜோடிய பாத்துட்டே இருக்கலாம் போலயே..!! இணையத்தை தெறிக்கவிட்ட வைரல் வீடியோ

Aathira / 1 week ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் மிகவும் எதிர்பார்ப்புக்கு உள்ளான ஒரு படமாக புஷ்பா 2 படம் காணப்படுகிறது. தெலுங்கு நடிகரான அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா மற்றும் பகத் பாஸில் நடிப்பில் இந்த படம் வெளியாக உள்ளது.

கடந்த 2021 ஆம் ஆண்டு புஷ்பா படத்தின் முதலாவது பாகம் வெளியாகி மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்தது. இந்த படம் சுமார் 1000 கோடி வரை வசூலித்து இருந்தது. விமர்சன ரீதியாக இந்த படம் டல் அடித்தாலும் வசூலில் சாதனை படைத்திருந்தது.

d_i_a

புஷ்பா முதலாவது பாகத்துக்கு கிடைத்த வெற்றியை தொடர்ந்து இதன் இரண்டாவது பாகம் எதிர்வரும் டிசம்பர் மாதம் ஐந்தாம் தேதி வெளியாக உள்ளது. இந்த படம் தொடர்பான ப்ரோமோஷன் பணிகள் தற்போது பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகின்றன.


புஷ்பா படத்தின் முதலாவது பாகத்தில் நடிகை சமந்தா 'ஊ.. சொல்றியா மாமா..' என்ற பாடலுக்கு குத்தாட்டம் போட்டு இருந்தார். புஷ்பா -2 படத்தில் ஸ்ரீலீலா நடனமாடியுள்ளார். இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.  மேலும் முதல் பாடலான 'கிஸ்ஸிக்' பாடல் வெளியாகி மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. 

இந்த நிலையில், புஷ்பா 2 படத்தின் பட ப்ரோமோஷன் மும்பையில் இடம்பெற்றுள்ளது. இதில் அல்லு அர்ஜுனும் ராஷ்மிகா மந்தனாவும் சேர்ந்து ஆடிய வைரல் வீடியோ தற்போது இணையத்தை கவர்ந்து உள்ளன. இதை பார்த்த ரசிகர்கள் தமது லைக்குகளை குவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement