• May 09 2024

கௌதம் மேனனுக்கு சிகரெட் பிடிக்க கற்றுக் கொடுத்த லோகேஷ் கனகராஜ்- அடடே இப்படியொரு சம்பவம் நடந்திருக்கா?

stella / 10 months ago

Advertisement

Listen News!


மாநகரம் என்னும் படத்தின மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமாகியவர் தான் லோகேஷ் கனகராஜ். இவருடைய முதல் படமே சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது.அப்படத்தைத் தொடர்ந்து கைதி படத்தை இயக்கினார். அந்தக் கதையை முதலில் மன்சூர் அலிகானுக்கு அவர் எழுதியதன் மூலமே அவர் தனது கதையின் மேல் எவ்வளவு பெரிய நம்பிக்கை வைத்திருக்கிறார் என்பதை புரிந்துகொள்ளலாம்.

 ஆனால் கைதி கதையை கேட்ட தயாரிப்பு நிறுவனம் பெரிய ஸ்டாரிடம் போகலாம் என கூற அதன் பிறகே கார்த்தி படத்துக்குள் வந்தார். அந்தப் படம் மெகா ஹிட்டானது.தொடர்ந்து  மாஸ்டர் படத்தில் விஜய்யுடன் இணைந்தார்அதுவரை விஜய்யை யாரும் காண்பிக்காத வகையில் காண்பித்து படத்தின் வெற்றியை அறுவடை செய்தார் . 


அதுமட்டுமின்றி ஹீரோவுக்கு ப்ளாஷ்பேக் இல்லாதது, ஹீரோவின் பெயரை விரிவாக கூறாதது என மேக்கிங்கில் வித்தியாசத்தை காண்பித்திருந்தார் அவர். இதே ஸ்டைலை மாநகரம் படத்திலும் அவர் கடைப்பிடித்திருந்தார்.மூன்று படங்கள் வெற்றியை அடுத்து கமல் ஹாசனுடன் விக்ரம் படத்தில் இணைந்தார். கமலின் தீவிர ரசிகர் லோகேஷ் கனகராஜ் என்பதை அவரே பல மேடைகளில் வெளிப்படுத்தியிருக்கிறார். 

வெறும் பேச்சோடு மட்டும் நிறுத்திக்கொள்ளாமல் தான் கமல் ஹாசனின் எவ்வளவு வெறித்தனமான ரசிகன் என்பதை விக்ரம் மேக்கிங்கில் காண்பித்தார் அவர். குறிப்பாக லோகேஷ் சினிமாட்டிக் யுனிவெர்ஸை உருவாக்கி அதகளம் செய்தார். படம் 500 கோடி ரூபாயை வசூலித்து மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது.

அவர் இப்போது லியோ படத்தை இயக்கிவருகிறார். படத்தில் கௌதம் மேனன், மிஷ்கின், சஞ்சய் தத், த்ரிஷா, ப்ரியா ஆனந்த், மாத்யூ தாமஸ், மன்சூர் அலிகான் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறது. படத்தின் இறுதிக்கட்ட ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்துவரும் சூழலில் கௌதம் மேனனுக்கு சிகரெட் அடிக்க லோகேஷ் கனகராஜ் கற்றுக்கொடுத்த சம்பவம் தெரியவந்திருக்கிறது.


அதாவது லியோ படத்தில் நடிக்கும் கௌதம் மேனனுக்கு சிகரெட் அடிக்கும் காட்சிகள் இருக்கின்றனவாம். ஆனால் கௌதம் மேனனுக்கோ சிகரெட் அடிக்க தெரியாதாம். இதை ஒருமுறை ஷூட்டிங் ஸ்பாட்டில் லோகேஷிடம் சொல்லியும்விட்டாராம் அவர். உடனே லோகேஷ் கௌதம் மேனனிடம் எப்படி சிகரெட் அடிக்க வேண்டும் என சொல்லிக்கொடுத்திருக்கிறார். இதனை பார்த்த கௌதமோ எப்படி இவ்வளவு பெர்ஃபக்ட்டா அடிக்கிற என்று கேட்டாராம். அதற்கு லோகேஷ் கனகராஜ், எல்லாம் உங்கள் காக்க காக்க போன்ற படங்களை பார்த்து கற்றுக்கொண்டதுதான் என கூறினாராம்.

அதேபோல் கோவிட் சமயத்தில் கௌதம் மேனன் உள்ளிட்ட முக்கியமான சீனியர் இயக்குநர்கள் எல்லோரும் ஒரு வாட்ஸ் அப் குரூப் ஆரம்பித்திருக்கிறார்கள். அந்த க்ரூப்பில் தற்கால தலைமுறையிலிருந்து லோகேஷும், கார்த்திக் சுப்புராஜும் மட்டும்தான் இருந்திருக்கிறார்கள். எனவே அப்போதிருந்தே கௌதம் மேனனிடம் ஒரு நல்ல புரிதல் உருவாகிவிட்டதாம்.அது லியோ ஷூட்டிங்கில் நிறையவே உதவியதாம். இந்தத் தகவலை லோகேஷ் கனகராஜ் ஒரு பேட்டியில் பகிர்ந்துகொண்டார்.


Advertisement

Advertisement

Advertisement