• May 05 2024

லோகேஷ் கனகராஜ் இப்படி செய்திருக்க கூடாது...புலம்பும் ரசிகர்கள்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் நடிப்பில் அடுத்ததாக உருவாகி வரும் திரைப்படம் தளபதி 67. லோகேஷ் கனகராஜ் - விஜய் கூட்டணி இரண்டாவது முறையாக இணைவதால் இப்படத்தின் மீது அதீத எதிர்பார்ப்பை ரசிகர்கள் வைத்துள்ளனர்.

வாரிசு படத்தின் ரிலீஸுக்கு பின் தளபதி 67ன் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என தெரிவித்தார்கள். அதன்படி, நேற்று தளபதி 67 படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பை 7ஸ்க்ரீன் நிறுவனம் வெளியிட்டது.

மேலும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் விஜய்யுடன் எடுத்துக்கொண்ட செம மாஸ் புகைப்படத்தையும் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். இதனால் ரசிகர்கள் செம குஷியானார்கள்.


தளபதி 67 படம் லோகேஷ் கனகராஜின் LCUவில் வரப்போகிறது என்று தான் கூறப்பட்டது. ஆனால், ரசிகர்கள் அனைவருக்கும் அதிர்ச்சியளிக்கும் விதமாக கைதி படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதில், தளபதி 67 படத்திற்காக லோகேஷ் கனகராஜுக்கு வாழ்த்து தெரிவித்துவிட்டது, தனியாக உருவாகும் யூனிவேர்ஸ் என்று குறிப்பிட்டுள்ளார்.எனினும் இதன்முலம் தளபதி 67 படம் லோகேஷ் கனகராஜின் LCUவில் வரவில்லை என தெரியவந்துள்ளது.

மேலும் இது தளபதி விஜய்யின் ரசிகர்களுக்கு ஓர் அதிர்ச்சியளிக்கும் செய்தி தான். ஆனால், விஜய்யை வைத்து புதிய யூனிவேர்ஸை கூட லோகேஷ் கனகராஜ் உருவாக்க திட்டமிட்டு இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இதுகுறித்து லோகேஷ் கனகராஜ் விரைவில் விளக்கம் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.



Advertisement

Advertisement

Advertisement