• Apr 25 2024

சிறிதும் வித்தியாசமின்றி... அச்சு அசல் சௌந்தர்யா போலவே இருக்கும் பெண்.. ஆச்சரியத்தில் மூழ்கிய ரசிகர்கள்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

'கந்தர்வா' என்ற கன்னட திரைப்படத்தின் மூலம் கடந்த 1992 ஆம் ஆண்டு ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை சௌந்தர்யா. அறிமுகப் படத்திலேயே தனது சிறந்த நடிப்பினை வெளிப்படுத்தி இருந்தமையினால் அடுத்தடுத்து இவர் நடித்த படங்கள் கன்னடத்தில் நல்ல வரவேற்பை பெற்றன. 


இதனைத் தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கு பட வாய்ப்புக்களும் இவருக்கு வந்து குவியத் தொடங்கின. அந்தவகையில் தமிழில் கார்த்திக்கு ஜோடியாக 'பொன்னுமணி' என்கிற படத்தின் மூலம் 1993 ஆம் ஆண்டு அறிமுகமானார்.


இவ்வாறாக இவர் நடிப்பில் வெளியான முதல் தமிழ்ப் படமே மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற நிலையில், இது இவரின் திரை உலக வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திக் கொடுத்தது.


மேலும் தமிழ் - கன்னடம் ஆகிய மொழிகளை தாண்டி, தெலுங்கு மொழியில் மட்டுமே சுமார் 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துப் பிரபலமானார்.


அத்தோடு இவர் நடிப்பில் உருவான 'முத்துக்காளை, அருணாச்சலம், படையப்பா, சொக்கத்தங்கம்' போன்ற படங்கள் தற்போது வரை ரசிகர்கள் மத்தியில் மறக்க முடியாத படங்களாக அமைந்து உள்ளன.


இவ்வாறு ஒரு முன்னணி நடிகையாக இருந்த சௌந்தர்யா 2003 ஆம் ஆண்டு அவருடைய தாய் வழி உறவினர்களில் ஒருவரான தொழிலதிபர் ஜி எஸ் ரகு என்பவரை திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கையில் இணைந்தார்.


நடிப்பைத் தாண்டி அரசியலிலும் தன்னுடைய ஆர்வத்தைக் காட்டி வந்த சௌந்தர்யா, கடந்த 2004 ஆம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சிக்கு ஆதரவாக பொதுக்கூட்டங்களில் கலந்து கொள்ள விமானத்தில் சென்றபோது அவர் சென்ற அந்த விமானம் எதிர்பாராத விதமாக விபத்துக்குள்ளானது.


இந்த விபத்தில் நடிகை சௌந்தர்யா பரிதாபமாக உயிரிழந்தார். இவரின் இழப்பு ரசிகர்கள் மற்றும் திரையுலகினரால் ஜீரணிக்க முடியாத விஷயமாக இருந்து வருகின்றது. 


இந்நிலையில் தற்போது பார்ப்பதற்கு இவரைப் போலவே ஒரு பெண் வீடியோக்களில் தோன்றி அனைவரையும் அசர வைத்து வருகிறார். அந்தவகையில் சௌந்தர்யா போலவே இருக்கும் இந்தப் பெண்ணின் பெயர் சித்ரா என்பது குறிப்பிடத்தக்கது. இதனைப் பார்த்த ரசிகர்கள் பலர் சௌந்தர்யாவின் மறுபிறவியா? என்பது போல் பல கேள்விகளை எழுப்பி விடுகிறார்கள். 


Advertisement

Advertisement

Advertisement