• May 03 2024

லோகேஷ் கனகராஜிற்கு படம் இயக்கத் தெரியாது,இதுவே பெரிய விஷயம்- உண்மையை உளறிய மாஸ்டர் பட பிரபலம்

stella / 7 months ago

Advertisement

Listen News!

தமிழில் மாநகரம் திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் தான் லோகேஷ் கனகராஜ். சிறிய அளவிலான பட்ஜெட் படம் என்றாலும் படம் சூப்பர் ஹிட்டடித்தது.அதன்பின் கார்த்தி நடிப்பில் கைதி திரைபப்டத்தைம் இயக்கி தனது இயக்கத்தில் மற்றுமொரு வெற்றியை கண்டார். மகளை பிரிந்த அப்பாவின் மனநிலைமையை மிக அழகாக காட்டியிருந்தார் .

 இவரது இயக்கத்தில் 2022ஆம் ஆண்டு வெளியான திரைப்படம்தான் விக்ரம். இத்திரைப்படத்தில் கமல், ஜெயராம், ஃபகத் ஃபசில் போன்ற பல முக்கிய பிரபலங்கள் நடித்துள்ளனர். இப்படம் இமாலய வெற்றியை கண்டது என்றுதான் கூற வேண்டும். மேலும் இப்படம் வசூலிலும் சாதனை படைத்தது. இவர் தற்போதி விஜய் நடிப்பில் லியோ திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார்.


விஜய் நடிப்பில் வெளியான் மாஸ்டர் திரைப்படத்தில் நடிகர் மகேந்திரன் நடித்திருந்தார். இப்படம் இவருக்கு வெற்றி படமாகவே அமைந்தது. மேலும் இப்படத்தில் நடித்த மகேந்திரன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் ஆரம்பத்தில் லோகேஷ் சாருக்கு படத்தினை இயக்க கூட தெரியாது ஏனென்றால் அவர் யாரிடமும் உதவி இயக்குநராக கூட இருந்தது கிடையாது. ஆனால் தனது சொந்த முயற்சியினால் இன்று இந்த அளவிற்கு வளர்ந்துள்ளார் என்பதை பார்க்கும் போது தனக்கே பிரம்மிப்பாக இருப்பதாக தெரிவித்தார்.

மேலும் தான் லோகேஷுடன் சமீபத்தில் அதி அளவில் உரையாடியதாகவும் அப்போது அவர் தனது உடலை திடமாக்க ஜிம்க்கு செல்வதாக கூறியதாகவும் தெரிவித்திருந்தார். முன்பு இயக்குனராய் இருந்த பொழுது சாப்பிட கூட மாட்டார் எனவும் ஆனால் தற்போது சரியான வேளைகளில் அவரின் அனைத்து வேலைகளையும் செய்து கொண்டு திடமாக உள்ளார் எனவும் கூறியுள்ளார்.


பின் இவ்வாறு தனது கடின உழைப்பினால்தான் இவ்வளவு தூரம் உயர்ந்து இருக்கிறார் எனவும் அவரது மாணவனாக மிகவும் பெருமிதத்துடன் அதே சமயம் அவர் மீது தனக்கு பொறாமையாக உள்ளதாகவும் மகேந்திரன் நேர்காணல் ஒன்றில் கூறியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement