• Mar 27 2023

அனுபவத்தில் சொல்கிறேன் இழந்து விடாதீர்கள்- விரக்தியின் உச்சியில் இருக்கும் செல்வராகவன்

stella / 3 weeks ago

Advertisement

Listen News!

மோகன் ஜி இயக்கத்தில் சில வாரங்களுக்கு முன்பு வெளிவந்த அந்த திரைப்படம் தான் பகாசூரன். இப்படத்தில் இயக்குநரரும் நடிகருமான செல்வராகவன் நடித்திருந்தார். இப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது.

இந்த நிலையில் தற்போது தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் உருக்கமான ஒரு பதிவை போட்டிருக்கிறார்.அதில் அவர், அனுபவத்தில் சொல்கிறேன் நல்ல நண்பர்களை மட்டும் இழந்து விடாதீர்கள். எனக்கு நண்பர்களே கிடையாது, 23 வருடங்களாக வேலையை தவிர எதைப்பற்றியும் நான் யோசித்தது கிடையாது. 


அதனாலேயே இன்று நண்பர்களுடன் ஆனந்தமாய் இருப்பவர்களை பார்த்தால் எனக்கு பொறாமையாக இருக்கிறது. எங்கு போய் நட்பை தேடுவேன் என்று தெரிவித்துள்ளார்.அவருடைய இந்த பதிவை பார்த்த பலரும் நாங்கள் இருக்கிறோம் உங்களுக்கு என்று ஆறுதலாக கூறி வருகின்றனர்.


 மேலும் ஒரு சிலர் எப்படி இருந்த மனுஷன் இப்படி ஆயிட்டாரு என்று கமெண்ட் கொடுத்து வருகின்றனர். ஏனென்றால் செல்வராகவன் இயக்குநராக வந்த ஆரம்ப காலகட்டத்தில் பலரும் வியந்து பார்க்கும் அளவுக்கு படங்களை கொடுத்தார். இருப்பினும் தற்பொழுது தோல்வி கொடுத்த பயத்தினால் விரக்தியின் உச்சத்தில் இருக்கும் செல்வராகவன் தன் வேதனையை இப்படி ஒரு பதிவின் மூலம் வெளிப்படுத்தி இருக்கிறார்.


Advertisement

Advertisement

Advertisement