• May 04 2024

மோசமான விமர்சனங்களைப் பெற்று வரும் லியோ- லோகேஷ் கனகராஜ் கொடுத்த பதிலடி

stella / 6 months ago

Advertisement

Listen News!

நடிகர் விஜய் நடிப்பில் ரிலீஸ் ஆகி உள்ள திரைப்படம் லியோ. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகி உள்ள இப்படம் பாக்ஸ் ஆபிஸில் பட்டைய கிளப்பி வருகிறது. லியோ படம் வசூலை வாரிக்குவித்தாலும் அப்படத்திற்கு கலவையான விமர்சனங்களே கிடைத்து வருகிறது.

 லியோ படம் பார்த்த பெரும்பாலானோர் முன்வைத்த விமர்சனம் படத்தின் முதல் பாதியை போல் இரண்டாம் பாதி இல்லை என்பது தான். இருந்தாலும் இந்தத் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸிலும் இதுவரை 300 கோடி வரை வசூலித்துள்ளது. 


இந்த நிலையில் இப்படம் குறித்து லோகேஷ் கனகராஜ் பதிலளித்துள்ளார். அதாவது லியோ படம் பிடித்திருந்தால் சந்தோஷம், எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கு. மக்கள் என்ன கலவையான விமர்சனங்களை முன்வைத்தாலும் அவர்கள் என்ன சொல்கின்றார்கள் என்பதைப் பார்த்து அடுத்த படத்திற்கு தயாராகனும். 

மேலும் தலைவர் 171 திரைப்படம் அடுத்த ஆண்டு மார்ச் அல்லது ஏப்ரலில் தொடங்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement